Connect with us

    ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழப்பு; மேலும் 14 பேர் மருத்துவமனையில் அனுமதி…!

    Student- Shawarma

    Viral News

    ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழப்பு; மேலும் 14 பேர் மருத்துவமனையில் அனுமதி…!

    கேரளாவில் கெட்டுப்போன ஷவர்மாவை சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Student- Shawarma

    கேரளாவின் காசர்கோடு அருகே செருவத்தூரில் உள்ள பேக்கரியில் ‘ஷவர்மா’ வாங்கி சாப்பிட்டதால் 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சோக சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளா கரிவள்ளூரைச் சேர்ந்த நாராயணன் மற்றும் பிரசன்னா தம்பதியரின் மகள் தேவானந்தா (16) என்ற சிறுமி, செருவத்தூரில் உள்ள ‘ஐடியல் கூல் பாரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவில் ஷவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளார்.

    ஷவர்மா கெட்டுப்போய் இருந்ததால், அச்சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    உடனடியாக அச்சிறுமி காஞ்சங்காட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அச்சிறுமி உயிரிழந்தார்.

    இவரை போல மற்றவர்களும் உணவகத்தில் வழங்கப்பட்ட கெட்டுப்போன ஷவர்மாவை சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.

    ஷவர்மா சாப்பிட்டதும் அவர்களுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது.

    பாதிக்கப்பட்ட 14 மாணவர்களும் கண்ணங்காடு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சிகிச்சை பெற்று வரும் 14 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    முதற்கட்ட தகவல்களின்படி, செருவத்தூரில் உள்ள ‘ஐடியல் கூல் பாரில்’ ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு கடுமையான உணவு விஷம் ஏற்பட்டது.

    சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் ஆவர்.

    வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த கூல் பாரில் இருந்து ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து சனிக்கிழமை இரவும் ஞாயிறு காலையும் சில குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் இன்று உத்தரவிட்டார்.

    மேலும், பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து, சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தியதில், உணவகத்தில் உள்ள ஷவர்மா சாப்பிட்டதால் தான் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை உறுதி செய்தனர்.

    தொடர்ந்து அந்த பேக்கரி மூடப்பட்டது. விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஷவர்மா சாப்பிட்டதால் மாணவி உயிரிழந்த சம்பவம் கேரளாவில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!