Tamil News
தேர்வுக்கு செல்லும் முன், பிட் பேப்பர்களை வைத்து கோயிலில் சாமி கும்பிட்ட மாணவர்; வைரலாகும் புகைப்படம்…!!
தேர்வில் பிட்டு அடிப்பதற்கு முன்னால், பிட்டு பேப்பர்களை கோயிலில் வைத்து சாமி கும்பிட்ட மாணவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் தேர்வில் காப்பி அடிப்பதற்காக பிட்டு பேப்பர்களை எழுதி வைத்துள்ளார்.
இந்த நிலையில் அந்த மாணவர் பள்ளிக்கு செல்வதற்கு முன்னால் அங்குள்ள கோவில் ஒன்றில் அந்த பிட்டு பேப்பர்களை வைத்து கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டுள்ளார்.
அந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட மாணவர் யார் என்பதை கண்டறிந்து அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குன்னத்தூரில் இருந்து வீடியோ வெளியாகியதாக தெரிய வந்துள்ளது.
இந் நிலையில் அந்த வீடியோவில் உள்ள மாணவர் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
