Viral News
பள்ளி வகுப்பறையில் கட்டிப்பிடித்தபடி இருந்த மாணவ மாணவிகள்; வைரல் வீடியோ வெளியாகி பரபரப்பு .!
பள்ளி வகுப்பறையில் மாணவ – மாணவிகள் கட்டிப்பிடித்து (hug) நெருக்கமாக இருந்த வீடியோ வைரலானதால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்த மாணவ – மாணவிகள்
அசாம் மாநிலம், தெற்கு அசாம், சில்சார் அருகே ராமானுஜ் குப்தா என்ற பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் சில மாணவ- மாணவிகள் வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்துக் கொண்டு நெருக்கமாக தொட்டுப் பேசிக்கொண்டிருந்தனர்.
இதை அங்கிருந்த சக மாணவர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது.
இந்த வீடியோவைப் பற்றி பெற்றோர்களும், பள்ளி நிர்வாகமும் அதிர்ச்சி அடைந்தது.
இந்த விவகாரம் விஸ்ரூபமானதால் சம்பந்தபட்ட 4 மாணவியர், 3 மாணவர்கள் உட்பட 7 பேரை பள்ளி நிர்வாகம் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இச்சம்பவம் குறித்து கல்வி நிறுவனத்தின் முதல்வர் பூர்ணதீப் சந்தா கூறுகையில், இந்த சம்பவம் மதிய உணவு இடைவெளியில் நடந்துள்ளது.
அந்த நேரத்தில் ஆசிரியர்கள் யாரும் வகுப்பறையில் இல்லை.
வகுப்பறைகளில் நாங்கள் சிசிடிவி வைத்திருக்கிறோம்.
பள்ளி வளாகத்திற்குள் செல்போன்களுக்கு அனுமதியில்லை.
இச்செயலில் ஈடுபட்டவர்கள் புதிதாக இங்கு சேர்ந்த மாணவர்கள்தான்.
இது குறித்து சஸ்பெண்டான மாணவ-மாணவியர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து விளக்கம் தர நோட்டீஸில் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
