Connect with us

    வேஸ்ட் ஆகிப் போனதா பீஸ்ட்; தொடர்ந்து அடிமேல் அடி வாங்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்…!!

    Beast Sun Pictures

    Cinema

    வேஸ்ட் ஆகிப் போனதா பீஸ்ட்; தொடர்ந்து அடிமேல் அடி வாங்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்…!!

    Beast Sun Pictures

    பிரமாண்டமான சினிமா படங்களை தமிழில் எடுத்து வெளியிடும் நிறுவனங்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதன்மை வாய்ந்தது.

    பல தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத் தில் இருந்தாலும் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களை எடுத்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

    இந்த நிறுவனத்தின் முதல் பிரமாண்ட தயாரிப்பு ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் படைப்பில் வெளிவந்த எந்திரன் திரைப்படம்.

    இந்த படம் சூப்பர் ஹிட்டாகி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை அள்ளி தந்தது.

    தமிழில் மட்டுமே தயாரிக்கப்பட்டு மிக அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் இன்றைக்கும் முதலிடத்தில் இருப்பது இந்த ‘எந்திரன்’ திரைப்படம்தான்.

    அதன் பிறகு பல திரைப் படங்களை சன் பிக்சர்ஸ் விநியோகம் செய்து வந்தது.

    இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் மீண்டும் 2018 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய சர்கார் திரைப்படத்தை மீண்டும் தயாரித்தது.

    சன் பிச்சர்ஸ்க்கு சர்கார் திரைப்படம் வெற்றி கொடுத்ததால் எப்படியாவது அடுத்தடுத்த திரைப்படங்களை தயாரித்து கல்லா கட்டிவிடலாம் என அந்நிறுவனம் நினைத்துக் கொண்டிருந்தது.

    ஆனால் அவர்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. அந்த வகையில் ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.

    அதனால் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை.

    சரி இந்த படம் போகட்டும் என அடுத்ததாக சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தயாரித்தார்கள்.

    ஆனால், ஜெய்பீம் பட பிரச்சினையால், பாமக வலுவாக உள்ள வட மாவட்டங்களில் எதற்கும் துணிநுதவனுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்தன.

    இதனால், வந்த வேகத்திலேயே எதற்கும் துணிந்தவன் காணாமல் போனது.

    இது போனால் போகட்டும், விஜயை வைத்து ஒரு ஹிட் படம் கொடுத்து, நஷ்டத்தை சரிக்கட்டி கல்லா கட்டி விடலாம் என நினைத்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

    அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டது.

    இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக இதுவரை எந்த ஒரு பாதிப்பும் இல்லை என கூறி வருகிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள்.

    ஆனாலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பீஸ்ட் படத்திற்கு முதலில் இருந்த வரவேற்பு தற்போது இல்லை என்றே கூறலாம்.

    இதனால் கடும் அப்செட்டாகியுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!