Connect with us

    10ம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் 100/100 மதிப்பெண் எடுத்து அசத்திய சூர்யா – ஜோதிகா மகள் தியா; குவியும் பாராட்டுக்கள்..!

    Surya Jyothika daughter Diya

    Cinema

    10ம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் 100/100 மதிப்பெண் எடுத்து அசத்திய சூர்யா – ஜோதிகா மகள் தியா; குவியும் பாராட்டுக்கள்..!

    சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை வெளியிட்டார்.

    Surya Jyothika daughter Diya

    நடப்பாண்டில் 10ஆம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.

    அவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேர் ஆவர்.

    மாணவிகள் மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 1 நபர் ஆவார்.

    10ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அதாவது 90.07 சதவீதம் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 பேர் அடைந்துள்ளனர். அதாவது 85.83 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும், 10 ஆம் வகுப்பில் 97.22 சதவீதம் தேர்ச்சியுடன் தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்து உள்ளது.

    அதே போல், வெறும் 79.87 சதவீத தேர்ச்சி மட்டுமே பெற்று, வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்து உள்ளது.

    இந்நிலையில், நடிகர் சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் தேர்வாகி உள்ளார்.

    கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்றிருக்கிறார்.

    தமிழில் 95 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், அறிவியலில் 98 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 95 மதிப்பெண்களும் பெற்று இருக்கிறார்.

    இப்படி தங்கள் மகள் தியா அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருப்பதால் சூர்யா-ஜோதிகா தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!