Connect with us

    எதற்கும் துணிந்தவனால்; சூர்யாவுக்கு ஏற்பட்ட சிக்கல்; திரையரங்க உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு..!

    Etharkum Thuninthavan

    Cinema

    எதற்கும் துணிந்தவனால்; சூர்யாவுக்கு ஏற்பட்ட சிக்கல்; திரையரங்க உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு..!

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 10ம் தேதியான திரையரங்குகளில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன் (Etharkum Thuninthavan ).

    Etharkum Thuninthavan

    சூரரைப் போற்று, ஜெய்பீம் என கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த சூர்யா, இந்த முறை மீண்டும் கமர்ஷியல் பக்கம் திரும்பி உள்ளார்.

    சமூக கருத்துக்காக பொள்ளாச்சி சம்பவத்தையும் ஸ்மார்ட் போன்களில் உள்ள கேமரா பெண்களை எந்தளவில் சீரழிக்கிறது என்கிற கதையை கொடுத்திருக்கிறார்.

    இதனால் இந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது படத்தை பார்த்த ரசிகர்களை இந்தப் படம் அவ்வளவாக கவரவில்லை.

    மேலும் இப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது.

    பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியான நாள் முதல் காட்சியே ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் இப்படம் வெளியான திரையரங்குகளில் பாதிக்கு மேற்பட்ட இடங்கள் காற்று வாங்குகிறது.

    தற்போது படத்தை பார்த்துவிட்டு வரும் பொதுமக்கள் படத்தை பற்றிய நெகட்டிவ் கருத்துக்களை கூறி வருகின்றனர்.இதனால் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது ட்விட்டரில் பல எதிர்மறையான கருத்துக்களை சந்தித்து வருகிறது.

    அதுமட்டுமல்லாமல் இப்படம் குறித்து பல மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.

    தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த சூர்யாவை ஒரே அடியாக சறுக்கி விட்டு விட்டார் பாண்டிராஜ். சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் மூலம் சறுக்கியுள்ளார்.

    எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு முன்பதிவு ஆகவில்லை என பெரும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    அதுமட்டுமில்லாமல் இரண்டாவது நாளே திரையரங்கம் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டது இதனால் திரையரங்க உரிமையாளர்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து உள்ளார்கள்

    இந்நிலையில் சூரியாவிடம் நஷ்ட ஈடு கேட்டு திரையரங்க உரிமையாளர்கள் பலரும் படை எடுத்து விட்டார்கள்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!