Cinema
சைலன்டாக வச்சு செஞ்ச ரசிகர்கள்; வந்த இடம் தெரியாமல் போன எதற்கும் துணிந்தவன் (Etharkum Thuninthavan).; கவலையில் படத்தயாரிப்பு நிறுவனம்..!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 10ம் தேதியான திரையரங்குகளில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன் (Etharkum Thuninthavan ).
சூரரைப் போற்று, ஜெய்பீம் என கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த சூர்யா, இந்த முறை மீண்டும் கமர்ஷியல் பக்கம் திரும்பி உள்ளார்.
சமூக கருத்துக்காக பொள்ளாச்சி சம்பவத்தையும் ஸ்மார்ட் போன்களில் உள்ள கேமரா பெண்களை எந்தளவில் சீரழிக்கிறது என்கிற கதையை கொடுத்திருக்கிறார்.
இதனால் இந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது படத்தை பார்த்த ரசிகர்களை இந்தப் படம் அவ்வளவாக கவரவில்லை.
மேலும் இப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது.
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியான நாள் முதல் காட்சியே ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் இப்படம் வெளியான திரையரங்குகளில் பாதிக்கு மேற்பட்ட இடங்கள் காற்று வாங்குகிறது.
தற்போது படத்தை பார்த்துவிட்டு வரும் பொதுமக்கள் படத்தை பற்றிய நெகட்டிவ் கருத்துக்களை கூறி வருகின்றனர்.இதனால் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது ட்விட்டரில் பல எதிர்மறையான கருத்துக்களை சந்தித்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இப்படம் குறித்து பல மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.
கடந்த வருடம் வெளியான மாநாடு, டாக்டர் போன்ற திரைப்படங்களின் முதல் நாள் வசூல் மட்டுமே பெருமளவில் இருந்தது.
அதுமட்டுமல்லாமல் அஜித்தின் வலிமை திரைப்படம் இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த வசூலை எல்லாம் வைத்து பார்க்கும்போது சூர்யாவின் இந்தப் படம் அதில் பாதியை கூட பெறவில்லை. இதை குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
ஏனென்றால் சூர்யாவின் கடந்த சில திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் மட்டுமே வெளியானது.
தற்போது அதை குறிப்பிடும் ரசிகர்கள் சூர்யாவை ஓடிடி ஸ்டார் என்று அழைக்கின்றனர்.
ஆகமொத்தம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய எதற்கும் துணிந்தவன் தற்போது காற்று போன பலூன் போன்று ஆகிவிட்டது.
மேலும், இன்றைய தினம் பிரபாசின் ராதே ஷ்யாம் வெளியாகியுள்ளதால் எதற்கும் துணிந்தவன் படத்தின் தமிழ் பதிப்பை பல திரையரங்களில் இருந்து தூக்கியுள்ளனர்.
படம் திரையிடப்பட்டு ஒரே நாளில் அனைத்து திரையரங்குகளிலும் தமிழ் பதிப்பு தூக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெய் பீம் விவகாரத்தில் சுமூகமான எந்த முடிவையும் எடுக்காமல் இழுத்தடித்தே விட்டார் நடிகர் சூரியா. இதனால்,
சூரியா மீது கடும் கோபத்தில் இருந்தனர் கொங்கு பெல்ட் இளம் ரசிகர்கள். எனவே, ஆதவு, எதிர்ப்பு.. போராட்டம் என எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்து விட்ட நிலையில் படம் வந்த இடமே தெரியாமல் போய்விட்டது.
குறிப்பாக, சேலம், தர்மபுரி, கோயம்பத்தூர் வட்டாரங்களில் எதற்கும் துணிந்தவன் படத்தை தூக்கி விட்டு “வலிமை” படத்தை மீண்டும் திரையிட்டுள்ளன பல திரையரங்குகள்.
இது போதாது என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல, திருவிழா ஒன்றில் நடிகர் சூரியாவுக்கு எதிராக இளைஞர்கள் கோஷம் போடும் வீடியோவும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
முன்னதாக ஜெய்பீம் விவகாரம் முடிந்து போன கதை.
அதை பேசிக்கொண்டு இந்த படத்துக்கு ப்ரமோஷன் பண்ண நாங்க ஆள் இல்லை. என்ன நடக்கணுமோ அது நடக்கும் என பிரபல அரசியல் கட்சி ஜகா வாங்கிக்கொண்டது.
மேலும், இத் திரைப்படத்தில் பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள உள்ளம் உருகுதையா பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள்,
தமிழ் கடவுளான முருகனை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், இப்பாடலை படத்திலிருந்து நீக்க கோரியும் அகில இந்திய நேதாஜி கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
பல்வேறு எதிர்ப்புகளால் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போய் விட்டது எதற்கும் துணிந்தவன்.
முன்னதாக ஜெய் பீம் படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக பாமக திடீரென எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து படத்தில் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன. அதே சமயம், எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் ஜெய் பீம் படம் எடுக்கப்படவில்லை என சூர்யா விளக்கம் கொடுத்திருந்தார்.
அதை ஏற்க மறுத்த பாமகவினர் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி வந்தனர்.
ஆனால், ஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சூரியா விளக்கம் கொடுக்காமல் எகத்தாளமாக அறிக்கை விட்டது தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்கிறார்கள்.
லோ பட்ஜெட்டில் எடுக்கபட்ட.. துக்கடா படத்தை கூட.. சூப்பர் ஹிட் ஆக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே இந்த படத்தின் மூலம் பெருத்த அடி வாங்கியுள்ளது.
