Connect with us

    நடிகர் சிம்பு (Simbu) ஏன் வாக்களிக்க வரவில்லை; செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு டி.ஆர் அளித்த ‘நச்’ பதில்..!

    Simbu T.R

    Cinema

    நடிகர் சிம்பு (Simbu) ஏன் வாக்களிக்க வரவில்லை; செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு டி.ஆர் அளித்த ‘நச்’ பதில்..!

    நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிம்பு (Simbu) ஏன் வாக்களிக்கவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டி.ஆர் அளித்த பதில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Simbu T.R

    தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.

    சாமானியர்கள் முதல் முக்கிய அரசியல் பிரபலங்கள் வரை அனைவரும் தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

    மேலும், தமிழ் திரையுலக நடிகர், நடிகைகளும் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

    நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை காலை 7 மணிக்கு பதிவு செய்தார்.

    தேனாம்பேட்டையில் திருவள்ளுவர் தெருவில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ஓட்டு போட்டார்.

    தி.நகரில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி வாக்களித்தனர். டிரஸ்ட்புரத்தில் பாடலாசிரியர் வைரமுத்து ஓட்டு போட்டார்.

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தி.நகரிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    நடிகர் அருண் விஜய், ஈக்காட்டுதாங்கலிலும், நடிகர் மன்சூர் அலிகான் அரும்பாக்கத்திலும் ஆனந்தராஜ் நுங்கம்பாக்கத்திலும் வாக்களித்தனர்.

    சென்னையில் உள்ள திநகர் இந்தி பிரசார சபை வாக்குச்சாவடி மையத்தில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட டி ராஜேந்தர் தனது வாக்கினை செலுத்தினார்.

    அப்போது நடிகர் சிம்பு ஏன் வாக்களிக்க வரவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    மும்பையில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், வாக்களிக்க வர முடியவில்லை என குறிப்பிட்டார்.

    இது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து ள்ள நெட்டிசன்கள்; இதெல்லாம் ஒரு காரணமா? ஓட்டு போடுவதற்காக அமெரிக்காவிலிருந்து ஒரு சாமானியன் வருகிறார்.

    ஆனால், மும்பையில் படப்பிடிப்பில் இருக்கும் ஒரு பிரபலம் வர முடியவில்லையா என கேள்வி எழுப்புகின்றனர்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, வாக்களிப்பது நமது கடமை; வாக்களிக்காமல் இருப்பது நமது மடமை என சிம்பு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!