World News
மிகக் குள்ளமான நபருக்கும் மிகவும் உயரமான பெண்ணுக்கும் இடையே நடைபெற்ற திருமணம்; குவியும் வாழ்த்துக்கள்..!
தற்போது இணையத்தில் பலரை வியக்க வைக்ககூடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் உலகிலேயே மிகக் குள்ளமான நபருக்கும் மிகவும் உயரமான பெண்ணுக்கு திருமணம் இடம்பெற்றுள்ளது.
இதன்மூலம் உலகிலேயே மிகக் குள்ளமான கணவரும் மிக உயரமான மனைவியும் இவர்கள்தான் என கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் (33) மற்றும் ஜோலி(27) என்பவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு தற்போது 2 வயதில் ஒலிவியா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
ஒருவரை நேசிப்பதற்கு அழகு ,வயது, உருவம்,நிறம்,மொழி ஆகியவைகள் ஒரு பெரிய தடை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இவர்களின் வாழ்க்கை முறை அமைந்துள்ளது.
உண்மையான அன்பும்,சரியான புரிதலுமே ஒரு தம்பதியர்களின் வாழ்க்கை வழி நடத்தி செல்கிறது.
ஜேம்ஸ் என்பவர் நடிகர் ஆவார். சோலி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
ஜேம்ஸ் 109.3 செ.மீ(3 அடி 7 இன்ச்) உயரம் கொண்டவர் ஆவார். சோலி என்பவர் 166.1செ.மீ(5 அடி 5.4இன்ச்)ஆவார்.
இவர்களுக்கிடையே கிட்டத்தட்ட 50 6.8 சென்டிமீட்டர் வித்தியாசமாக உள்ளது. ஜூன் 2, 2021 ஆம் ஆண்டு ஒரு குள்ளமான ஆண் அவரை விட உயரமான பெண்ணை திருமணம் செய்து கொண்டு ரெக்கார்டை முறியடித்துள்ளார்.
இவர்களது புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
