Viral News
லண்டனில் ஒரு தமிழ் பெண்ணுக்கு கிடைத்த கவுரவம்; குவியும் பாராட்டுக்கள்…!
லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியியலாளராக பணியாற்றும் வா ய்ப்பை தமிழ்ப் பெ ண் ஒருவர் பெற்றுள்ளார்.
தமிழகத்தின் நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்னடாா் கிராமத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா் சு. பாஸ்கரன் – ஆசிரியை தையல்நாயகி தம்பதியின் மூத்த மகள் சுபிக்சா.
இவர் பள்ளிக்கூடத்தில் முதலாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் படித்தவா்.
2021-ஆம் ஆண்டில் லண்டனுக்கு சென்ற அவா் அங்கு, லண்டன் யுஎஸ்ஏவில் எம்.எஸ் படித்து வந்தாா்.
படிக்கும்போதே லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியாளராக தோ்வாகி பணி வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டசாலியானார் சுபிக்சா.
படிக்க சென்ற நிலையில் பணி வாய்ப்பையும் பெற்று மகிழ்ச்சியோடு பணியாற்றி வரும் சுபிக்சா தனது பெற்றோருக்கு ஒரு அதிர்ச்சி தர முடிவு செய்தார்.
அதன்படி பெற்றோரிடம் தான் ஊருக்கு வருவதை தெரிவிக்காமல் இன்ப அதிா்ச்சி கொடுக்க திடீரென செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்திருக்கிறார் சுபிக்சா.
படிக்க சென்ற நிலையில் பணி வாய்ப்பையும் பெற்று மகிழ்ச்சியோடு பணியாற்றி தமிழகத்திற்கே பெருமை சேர்த்து கொடுத்த சுபிக்சாவை உள்ளூர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் சமூகவலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
