Connect with us

    குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற பெண்ணை கக்கூஸில் தங்க வைத்து கொடுமை; எப்படியாவது தன்னை காப்பாற்றுமாறு வீடியோ வெளியிட்டு கதறல்..!!

    Buvana

    Tamil News

    குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற பெண்ணை கக்கூஸில் தங்க வைத்து கொடுமை; எப்படியாவது தன்னை காப்பாற்றுமாறு வீடியோ வெளியிட்டு கதறல்..!!

    துபாயில் வீட்டு வேலைக்கு சென்ற சென்னை தண்டையார் பேட்டை பெண் ஒருவர், தன்னை கழிவறையில் அடைத்து வைத்து கொடுமை படுத்துவதாகவும், தன்னை காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

    Buvana

    சென்னை, தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர் ,4வது தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் பால். இவரது மனைவி புவனா(37).

    இவர்களது குடும்பத்தில் ரூ.4 லட்சம் வரை கடன் ஏற்பட்டதால், தாங்கள் வாங்கிய கடனை அடைக்க சில மாதங்களுக்கு முன், ஜான்சன் என்பவர் மூலம் புவனா குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.

    குவைத்தில் உள்ள ஒரு குடும்பத்தாரின் குழந்தையை கவனிக்கும் வேலை என சொல்லி புவனா வேலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    இந்நிலையில், புவனா திடீரென, அவரின் குடும்பத்தாருக்கு கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் தங்கியிருக்கும் அறையையும் வீடியோ எடுத்துள்ளார்.

    அதில் ஒரு பெரிய குடும்பத்திற்கே தாம் வேலை செய்வதாகவும் அங்கு 20 மணி நேரம் தம்மை வேலை வாங்குவதாகவும் அடித்து அவமானப்படுத்தி கழிவறையில் படுக்க வைப்பதாகவும் கூறியுள்ளார்.

    மூக்கில் இரத்தம் வரும் அளவிற்கு வேலை வாங்கி கொடுமை படுத்துவதாகவும் சாப்பிட உணவு கூட சரியாக தராமல் அடிப்பதாகவும் கதறி அழுதுள்ளார்.

    இதையடுத்து, ஜேம்ஸ் பால், எய்ம்ஸ் எனும் தனியார் தொண்டு நிறுவனத்தை உதவிக்கு நாடினார்.

    அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணியா பாபு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் , புவனா குறித்து கூறியுள்ளனர்.

    அதற்கு அந்த அதிகாரிகள், புவனா அங்கிருந்து தப்பித்து, எங்களின் தூதரகத்திற்கு வந்தால், புவனாவை காப்பாற்றி, தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கலாம் என்றனர். ஆனால்,

    ஜேம்ஸ் பால் கூறும்போது; அந்த நாட்டின் காவல் அதிகாரி ஒருவர் வீட்டில் தான் புவனா வேலை பார்க்கிறார்.

    தப்பித்து வந்தால், திருட்டு பழி சுமத்தி, நிரந்தரமாக சிறையில் தள்ளிவிடுவார்கள் என அதிர்ச்சியளித்தார்.

    இந்நிலையில், ஜேம்ஸ் பால் இதுகுறித்து எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் இது குறித்து பேசிய அவரது மகள், தன் தாயை எப்படியாவது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!