Connect with us

    இந்து முறைப்படி நைஜீரிய பெண்ணை திருமணம் செய்த தமிழக இளைஞர்; குவியும் வாழ்த்துக்கள்..!

    Youth married Nigeria girl

    Uncategorized

    இந்து முறைப்படி நைஜீரிய பெண்ணை திருமணம் செய்த தமிழக இளைஞர்; குவியும் வாழ்த்துக்கள்..!

    4 ஆண்டுகளாக காதலித்து வந்த நைஜீரிய பெண்ணை ‘இந்து’ முறைப்படி தாலி கட்டி மணமாலை சூடியிருக்கிறார் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த தமிழக இளைஞர்.

    Youth married Nigeria girl

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பள்ளி வெங்கடாஜலபதி தெருவை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி- லட்சுமி தம்பதியினர்.

    இவர்களின் மகன் திருமால் பிரசாத் (வயது 28). இவர் டிப்ளமோ படித்துவிட்டு ஜெர்மனி நாட்டில் வேலை செய்து வருகிறார்.

    ஏற்கனவே நைஜீரியாவில் சில ஆண்டுகள் வேலை செய்து வந்துள்ளார் .

    அப்போது அங்குள்ள லாகோஸ் நகரைச் சேர்ந்த பட்ரிசியா இயின்வாஎசா (25) என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

    சுற்றுலா மற்றும் மருத்துவமனை நிர்வாகம் துறையில் பட்டம் பெற்ற அந்த பெண், திருமால் பிரசாத் வேலை பார்த்த நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார்.

    பட்ரிசியாவின் அழகில் மயங்கிய திருமால் அவரிடம் நட்பாக பழகி இருக்கிறார்.

    இவ்வாறாக நட்புடன் இநுவரும் பழகி வந்த நிலையில், ஒருநாள் அவரிடம் சென்று மனம் திறந்து தன் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் திருமால்

    பட்ரிசியாவுக்கும் வெளிப்படையாக பேசிய திருமால்பிரசாத்தைப் பிடித்து போனது.

    இருவரும் ஒருவரையொருவர் காதலி த்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் இருவரும்  பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர்.

    அதற்கான ஏற்பாடுகள் மணமகனின் சொந்த ஊரான வாலாஜாவில் நடந்தது.

    இந்து முறைப்படி பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம்  நேற்று   நடைபெற்றது.

    இதற்காக மணமகள்  பட்ரிசியா இயின்வாஎசா, நைஜீரியா நாட்டிலிருந்து அண்ணன் சிபுஸோர்வாலண்டைன்எசாவுடன் நேற்று முன்தினம் வாலாஜாவிற்கு வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு  வரவேற்பு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மாப்பிள்ளை அழைப்பு, நாதஸ்வர கச்சேரியுடன்  நடந்தது.

    மணமக்கள் இருவரும் அங்குள்ள கோயிலுக்கு சென்று தாம்பூல தட்டுகள் மாற்றப்பட்டது.

    பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நேற்று காலை திருமணம் நடைபெற்றது. அதில் மணமகள் தமிழ் முறைப்படி பட்டுச்சேலை மற்றும் நகைகள் அணிந்திருந்தார்.

    பின்னர் கெட்டி மேளம் முழங்க, புரோகிதர் மந்திரம் ஓத மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.
    கூடியிருந்த உறவினர்களும், நண்பர்களும் மலர்த்தூவி இருவரையும் வாழ்த்தினர்.

    மணக்கோலத்திலிருந்த பட்ரிசியாவைப் பார்த்து, ‘தமிழ்நாட்டின் மருமகளே!’ என்றும் அவரை ஆசையோடு வரவேற்று மகிழ்வித்தனர்.

    இதையடுத்து, வாலாஜாபேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!