Connect with us

    ஆன்லைனில் ஸ்போக்கன் இங்கிலீஷ் படிச்சு இந்தோனேசிய பெண்ணை காதலித்து கரம்பிடிச்ச இளைஞர்..!!

    Indonesian girl

    Viral News

    ஆன்லைனில் ஸ்போக்கன் இங்கிலீஷ் படிச்சு இந்தோனேசிய பெண்ணை காதலித்து கரம்பிடிச்ச இளைஞர்..!!

    உத்திர பிரதேச மாநிலம் தியோரா மாவட்டத்தை சேர்ந்தவர் சன்வர் அலி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    அந்த சமயத்தில் இந்தோனேசியாவை சேர்ந்த மிஃப்தாவுல் ஜன்னா என்ற பெண்ணும் பேஸ்புக் மூலம் சன்வர் அலிக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

    Indonesian girl

    அப்போது, தான் கற்ற ஆங்கிலம் மூலம் ஜன்னாவிடம் பேச தொடங்கி உள்ளார் சன்வர்.

    இந்தோனேஷியாவில் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வரும் மிஃப்தாவுல் ஜன்னா, பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

    கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் தென்பகுதியில் புயல் வந்ததை அறிந்த மிஃப்தாவுல் ஜன்னா, சன்வர் அலி மற்றும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று கேட்டு அறிந்து கொண்டுள்ளார்.

    இதற்கு பதில் சொல்ல நேரம் எடுத்துக் கொண்ட மிஃப்தாவுல் ஜன்னா, சுமார் ஆறு மாத காலம் கழித்து சன்வர் அலியின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவுக்கு சென்ற சன்வர் அலி, மிஃப்தாவுல் ஜன்னா மற்றும் அவரது குடும்பத்தினரை முதன் முறையாக நேரில் சந்தித்துள்ளார்.

    இருவரது குடும்பத்தினரும் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் அவர்கள் திருமணத்திற்கும் சம்மதம் சொல்லியுள்ளனர்.

    இதனையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் இந்தோனேசியா சென்ற சன்வர் அலிக்கும், மிஃப்தாவுல் ஜன்னாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

    திருமணத்திற்கான ஏற்பாடுகளுக்கு திட்டம் போட்டு வந்த நிலையில், கொரோனா பரவல் தொடங்கி உள்ளது. இதனால், திருமண வேலைகளும் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் சன்வர் – ஜன்னா திருமணம் நடந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம், உத்தர பிரதேச மாநிலம், தியோரா மாவட்டத்தில் வைத்து அவர்களின் திருமண வரவேற்பும் நடந்துள்ளது.

    ஆன்லைன் மூலம் பழக்கம் ஏற்பட்டு, ஆங்கிலத்தின் உதவியுடன் இந்தோனேஷியா பெண்ணுடன் காதலித்து அவரை இந்திய இளைஞர் திருமணமும் செய்து கொண்ட செய்தி, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!