Connect with us

    விமானத்தில் நெஞ்சு வலியால் துடித்த பயணி; முதலுதவி செய்து காப்பாற்றிய தமிழிசை சவுந்தராஜன்; குவியும் பாராட்டுக்கள்..!

    Tamilisai

    Tamil News

    விமானத்தில் நெஞ்சு வலியால் துடித்த பயணி; முதலுதவி செய்து காப்பாற்றிய தமிழிசை சவுந்தராஜன்; குவியும் பாராட்டுக்கள்..!

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பயணித்த விமானத்தில் சக பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் துரிதமாக முதலுதவி அளித்து அவரை காப்பாற்றிய தமிழிசை சவுந்தராஜனின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

    Tamilisai

    தமிழக பாஜக முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் தமிழிசை சவுந்தரராஜன்.

    தற்போது அவர் தெலுங்கானா கவர்னராவும், புதுச்சேரி துணை நிலை கவர்னராக பதவி வகித்து வருகிறார்.

    மருத்துவரான இவர் மகப்பேறு சிறப்பு நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது

    இந்நிலையில் நேற்று வாரணாசியில் இருந்து டெல்லி வழியாக சென்ற இன்டிகோ விமானத்தில் ஐதராபாத்தில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார்.

    நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது சக பயணி ஒருவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.

    வலியால் துடித்த அவரை பார்த்த சக பயணிகள் பதறிப் போய் உதவி உதவி என்று கூச்சலிட்டனர்.

    விமான ஊழியர்கள் மருத்துவர்கள் யாரேனும் விமானத்தில் இருந்தால் உடனடியாக உதவிக்கு வரவும். பயணி ஒருவரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்று அறிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்தனது மருத்துவ பணியை மேற்கொண்டு நெஞ்சுவலி ஏற்பட்ட பயணிக்கு முதலுதவி அளித்து அவரின் உயிரை காப்பாற்றினார்.

    பயணி நன்றி கூறிய நெகிழ்ச்சிமிக்க காட்சியை பார்த்த அங்கிருந்தவர்கள் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

    மேலும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுடன் பயணிகள் பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    தங்களது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

    இது குறித்து சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட பதிவுகளை பார்த்த மக்கள், தமிழிசை சவுந்தரராஜனுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!