Viral News
டீ குடிக்கும் போது, டம்ளரையும் ( tea tumpler) சேர்த்து விழுங்கிய முதியவர்; ஸ்கேனில் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை; பதறிய டாக்டர்கள்..!!
பீகார் மாநிலத்தை சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவர் டீ குடிக்கும் போது அறியாத விதமாக டம்ளரையும் ( Tea tumpler) சேர்த்து விழுங்கிவிட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் முசாஃபர்நகரை சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவர் தனியார் மருத்துவமனைக்கு மலசிக்கல் மற்றும் அடி வயிறு வலி காரணமாக மருத்துவமனைக்கு வந்தார்.
டாக்டர்கள் அவருக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அவரது வயிற்றில் ஏதோ பெரிய பொருள் ஒன்று இருந்தது. தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் அந்த பொருள் இருக்கும் இடத்தை பார்த்த போது அது குடல் பகுதியில் இருந்தது தெரியவந்தது.
பின்னர் டாக்டர்கள் அந்த பொருளை ஆசன வாய் வழியாக வெளியே எடுக்க முடிவு செய்தனர்.
ஆனால் அது வரவில்லை.
மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த டம்ளரை வயிற்றில் இருந்து நீக்கியுள்ளனர்.
இந்த டம்ளர் எப்படி இவர் குடலுக்குள் வந்தது என டாக்டர்களுக்கு தெரியவில்லை.
இது குறித்து அவரின் குடும்பத்தாரிடம் விசாரித்த போது அவர் டீ குடிக்கும் போது டம்ளரை விழுங்கிவிட்டதாக கூறியுள்ளனர்.
ஆனால் அதற்கு மருத்துவ ரீதியாக வாய்ப்புகள் இல்லை அவரது தொண்டை உணவு குழாய் பகுதி டம்ளர் செல்லும் அளவிற்கு பெரிதாக இருக்காது. அதனால் அது சாத்தியமில்லை.
அவரது குடும்பத்தினர் வேறு எதையும் பகிர மறுத்துவிட்ட நிலையில் டாக்டர்கள் இது எப்படி சாத்தியம் என யோசித்த போது இதற்கு ஒரே ஒரு வழி தான் இருந்துள்ளது.
இந்த டம்ளரை அவரது ஆசை வாய் வழியாக மட்டும் தான் உள்ள அனுப்பியிருக்க முடியும் என டாக்டர்கள் சொல்லுகின்றனர்.
ஆனால் அவரது குடும்பத்தினர் இது குறித்த தகவல்களை பகிர மறுப்பதால் அவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் அவரது குடும்பம் குறித்த தகவல்கள் பகிரப்படவில்லை.
