Connect with us

    தேசியக்கொடியை அவமரியாதை செய்த பள்ளி ஆசிரியர் கைது..!

    Flag teacher

    Tamil News

    தேசியக்கொடியை அவமரியாதை செய்த பள்ளி ஆசிரியர் கைது..!

    தாராபுரத்தில் தேசியக்கொடியை அவமதித்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் எபின் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Flag teacher

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் எபின் (36).

    இவர் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அதன் அடிப்படையில் அனைத்து வீடுகளிலும் இந்திய தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

    அந்த வகையில் பள்ளி ஆசிரியர் தேசியக் கொடியில் இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும் என சர்ச் சைக்குரிய வாசகம் எழுதி தேசியக் கொடியை தனது வீட்டின் மொட்டைமாடியில் கட்டி இந்திய தேசிய மூவர்ணக் கொடியை பறக்க விட்டார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தாராபுரம் போலீசில் தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பெயரில் தாராபுரம் காவல்துறை ஆய்வாளர் மணிகண்டன் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    அதன் பின்னர் ஆசிரியர் எபினை தேசியக்கொடி அவமதிப்பு குறித்த வழக்கில் கைது செய்ய சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!