Tamil News
பள்ளி வளாகத்தில் இருந்த தேக்கு மரங்களை வெட்டி வீட்டிற்கு கொண்டு சென்ற ஆசிரியர்; மாணவர்கள் அதிர்ச்சி..!!
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சிக்கு உட்பட அரசு பள்ளியில், 20 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த தேக்கு மரங்களை அடியோடு வெட்டி விற்பனை செய்ய முயன்ற பள்ளி உதவி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் வெங்காயவேலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது, இந்த பள்ளி வளாகத்தில்
கடந்த 20 ஆண்டுகளாக மாணவர்களால் 21 தேக்கு மரங்கள் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த.
இந்த 21 தேக்கு மரத்தை அதே பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரியும் கண்ணன் என்பவர் அனுமதியின்றி, கடந்த 6 ஆம் தேதி தேக்கு மரத்தை அடியோடு வெட்டி வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னா் மரங்கள் வெட்டி இருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இதன் பேரில், உதவி ஆசிரியர் கண்ணன் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்
