Connect with us

    +1 மாணவனை இழுத்து கொண்டு ஓட்டம் பிடித்த ஆசிரியை; அதிர்ச்சியில் பெற்றோர்..!

    Teacher runs with student

    Tamil News

    +1 மாணவனை இழுத்து கொண்டு ஓட்டம் பிடித்த ஆசிரியை; அதிர்ச்சியில் பெற்றோர்..!

    திருச்சி அருகே +1 மாணவன் காணாமல் போன விவகாரத்தில் அவன் படிக்கும் பள்ளி ஆசிரியை அம்மாணவனை இழுத்து கொண்டு ஓடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Teacher runs with student

    திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி கிராமத்தை சோந்தவா் ஞானமலா். இவரது 17 வயது மகன் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 5ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவர் மாலையில் பள்ளி முடித்து, வீட்டுக்கு வந்துள்ளார்.

    பின்னர், பெற்றோரிடம் தான் விளையாட செல்வதாக கூறி விட்டு உடனே வீட்டில் இருந்து வெளியில் கிளம்பினார்.

    அதன் பின்னர் விளையாட சென்ற மாணவர் வீடு திரும்பவில்லை.

    இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் மாணவரை தேடினர்.

    எங்கு தேடியும் இல்லாததால் மாணவர் எங்கே சென்றார் என்பது குறித்த எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து மாணவனின் நண்பர்களிடம் விசாரித்ததில் அவன் நண்பர்களுடன் விளையாட செல்லவில்லை எனவும், மேலும் அதே பள்ளியில் பணியாற்றும் மாணவனின் வகுப்பு ஆசிரியை சர்மிளாவும் மாயமாகி இருப்பதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து நேற்று மாணவரின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அந்த புகாரில் தனது மகனை காணவில்லை என்றும் மாணவர் காணாமல் போன அன்று அவரின் வகுப்பு ஆசிரியையும் காணாமல் போயிருப்பதால் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் சிக்கந்தம்பூர் பகுதியை சோந்த சர்மிளாவுடன் அவா் சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் மாணவரின் தாயார் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் துறையூர் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவர் படித்த பள்ளியில் போலீசார் விசாரித்ததில் அதே நாளில் ஆசிரியையும் மாயமானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் துறையூர் அருகே உள்ள சிக்கந்தம்பூர் கிராமத்தை சேர்ந்த அந்த ஆசிரியை சர்மிளா எம்ஏ., பிஎட்., படித்து விட்டு கடந்த 6 ஆண்டாக அந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

    இருப்பினும் ஆசிரியை மாயம் தொடர்பாக இதுவரை போலீசில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை.

    மாணவரும் ஆசிரியையும் ஒரே நாளில் மாயமாகி உள்ளதால் இருவரும் சேர்ந்து சென்றிருக்கலாம் என மாணவரின் தாயார் எழுப்பிய சந்தேகம் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!