Connect with us

    “என் புருசனை நினைச்சு தான் இரவில் தூங்கணும்” – மாணவிகளை செல்போனில் பேச சொல்லி டார்ச்சர் கொடுத்த ஆசிரியை இடமாற்றம்..!

    Teacher Santhi Priya

    Tamil News

    “என் புருசனை நினைச்சு தான் இரவில் தூங்கணும்” – மாணவிகளை செல்போனில் பேச சொல்லி டார்ச்சர் கொடுத்த ஆசிரியை இடமாற்றம்..!

    தன்னிடம் படிக்கும் மாணவியை மருமகளாக அழைத்து, மகனிடம் பேசச் சொல்லி ஆசிரியை செய்த டார்ச்சரர் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Teacher Santhi Priya

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில், கணித பாட முதுநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சாந்தி பிரியா.

    இவரது வகுப்பில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை மருமகளே என முறை வைத்து அழைத்து மருமகளாக பாவித்துள்ளார் அந்த ஆசிரியர்.

    மேலும் அந்த மாணவியிடம் அவரிடம் புகைப்படம் கேட்டும் தனது மகனிடம் அலைபேசியில் பேசுமாறும் வற்புறுத்தி உள்ளார்.

    அத்துடன் மாணவிகளை, வகுப்பறையில் அவமானப்படுத்துவதும். பாடத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு அவமதிப்பு செய்துள்ளார்.

    மேலும் இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பாட விஷயமாக பேச வேண்டும் என்று கூறுவதுடன், பாடம் தவிர்த்து மற்ற விஷயங்களை பேசியுள்ளார். அழைப்பை ஏற்க மறுக்கும் மாணவிகளிடம் தேர்வு மதிப்பெண்களில் கை வைப்பேன் என்று மிரட்டியுள்ளார். அத்துடன் மாணவிகள் அவருடைய காலில் விழுந்து ப்ளீஸ் என்று கெஞ்சினால் தான் பாடம் நடத்துவேன் என்று கூறியுள்ளார்.

    மேலும் மாணவிகள் ஒவ்வொரு நாள் தூங்கும்போதும் அந்த ஆசிரியையின் கணவரை நினைத்துக் கொண்டு தான் தூங்க வேண்டும் என்று வன்மத்தை விதைத்துள்ளார்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் புகார் அளித்தனர்.

    மாணவிகள் மட்டுமின்றி அவரால் மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியர்களும் சாந்தி பிரியா மீது மாவட்ட உயர் கல்வி அதிகாரிகளிடம் புகார் கூறினர்.

    இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணையில் குற்றம் உறுதியானதையடுத்து ஆசிரியை சாந்திப்பிரியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக பூலாங்கிணறு அரசுப்பள்ளிக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!