World News
“என் கணவரை சந்தோஷமாக வைத்துக்கொள்ள 3 பெண்கள் தேவை, சம்பளம் மாதம் ரூ.33000” – விளம்பரம் வெளியிட்ட பெண்…!
தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ( (Thailand woman) ஒருவர் தன் கணவனை சந்தோஷமாக வைத்துக்கொள்ள 3 பெண்கள் தேவை என வெளியிட்ட விளம்பரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தை சேர்ந்த பதீமா சாம்னன் என்னும் 44 வயது பெண்மணி தன் கணவனை கவனித்து கொள்வதற்கும், அவரை திருப்திபடுத்தவும், அவரை சந்தோஷமாக வைத்து கொள்ளவும் மூன்று பெண்கள் தேவை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.
அவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 33,800 நிர்ணயித்து உள்ளார்.
இதற்காக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசியிருப்பதாவது:
“என்னுடைய கணவனை கவனித்துக்கொள்வதற்கு 3 அழகான பெண்கள் தேவை.
அவர்கள் இளமையாகவும் நன்கு படித்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
குறிப்பாக அவர்கள் திருமணம் ஆகாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
மூன்று பேரில் இருவர் என் கணவரின் அலுவலகப் பணிகளில் உதவியாக இருக்க வேண்டும்.
மீதமுள்ள ஒருவர் என் வீட்டை கவனிப்பதோடு என் கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும்.
அவரின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு குழந்தை இருக்கக் கூடாது.
அது ஒரு தடையாக அமையும். என் கணவர் மிகவும் கடுமையாக உழைப்பவர். அவரின் மகிழ்ச்சிக்காகவே இவை அனைத்தையும் செய்கிறேன்.
அவரை அனைத்து வகையிலும் கவனித்து, நிம்மதியாக வைத்துக்கொள்ள எனக்கு ஆட்கள் தேவை எனக் கூறியுள்ளார்.
மேலும், உங்களுக்கு மாதம் ரூ.33,800 சம்பளம் கிடைக்கும், இலவச தங்குமிடம் மற்றும் இலவச உணவு கிடைக்கும். உங்களுக்கும் எனக்கும் இடையே எந்த சண்டையும் வராது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன் எனவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் கடும் வைரலானது.
இது குறித்து அவரது கணவர் பட்டகோர்ன் கூறியதாவது:
என்னைக் கவனித்துக் கொள்ள யாரையாவது தேர்வு செய்ய வேண்டும் என்று என் மனைவி என்னிடம் சொன்னாள்.
அந்த பெண்களும் எங்கள் குடும்ப பெண்கள் போலவே நடத்தப்படுவார்கள், மேலும் எங்கள் நிறுவனத்தில் குடும்ப பெண்கள் போலவே வேலை செய்வார்கள்.
என்னைப் போல் இருக்க விரும்பும் மற்ற ஆண்கள் தங்கள் மனைவிகளிடம் இது பற்றித் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் எதிர்காலத்தில் எந்த பிரச்சனைகளும் இருக்காது என கூறியுள்ளார்.
இவரது வீடியோ இணையத்தில் கடும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
