World News
56 வயதான பெண்ணை காதலித்து திருமணம் செய்ய உள்ள 19 வயதான இளைஞன்; குவியும் பாராட்டுக்கள்…!!
தாய்லாந்தில் 56 வயதான பெண்ணை 19 வயதான இளைஞன் ஒருவன் திருமணம் செய்து கொள்ளவுள்ள சம்பவம் சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றன.
வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள சகோன் நகோன் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அண்டை வீட்டாராக வுத்திச்சாய் சந்தராஜ் எனும் 19 இளைஞனும் 56 வயதுடைய ஜன்லா நமுவாங்ராக்கையும் வசித்து வருகின்றனர்,
வுத்திச்சாய் சந்தராஜ், தனது 10 வயதிலேயே தனது வருங்கால மனைவியான ஜன்லாவை சந்தித்தார்.
ஜான்லா தனது வீட்டை சுத்தம் செய்ய வுத்திச்சையின் உதவியைக் கேட்டபோது அவர்களிடையே ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகிக் கொண்ட இந்த ஜோடி பல ஆண்டுகளாக நெருக்கமாக இருந்துள்ளனர்.
விவாகரத்து பெற்ற ஜான்லாவுக்கு முப்பது வயதுக்கு மேற்பட்ட மூன்று குழந்தைகள் உள்ளதுடன் பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
வுத்திச்சாய் எனக்கு சூப்பர் ஹீரோ மாதிரி. தினமும் எனக்கு அவர் உதவி செய்வார். அவனை சிறு வயது முதல் எனக்கு தெரியும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் உறவுகளைப் பற்றி தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் தாங்கள் காதலிக்கிறோம் என்று முதலில் சொன்னபோது, தங்களை பைத்தியம் என்று பலர் நினைத்ததாக ஜன்லா கூறினார்.
ஆனால் அவர் என்னை மீண்டும் இளமையாக உணர வைக்கிறார், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். மேலும் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என ஜன்லா தெரிவித்துள்ளாராம்
