Tamil News
திருடச் சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால், கோபத்தில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த திருடன்…!
திருடச்சென்ற இடத்தில் பொருட்கள் எதுவும் இல்லாததால் கடும் கோபம் அடைந்த திருடன், அந்த வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்து உள்ள கோவூர் பகுதியில் 22 வயது இளம் பெண் ஒருவர், தந்தை இல்லாத நிலையில் தனது தாய் சகோதரியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது தாயாரும், சகோதரியும் வெளியூர் சென்றிருந்தனர்.
அன்று அந்த இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.
அப்போது, அந்த இளம் பெண் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்து மீறி நுழைந்த ஒரு மர்ம நபர், அந்த வீட்டில் திருடச் சென்று உள்ளார்.
ஆனால், அந்த வீட்டில் திருடிச் செல்லும் அளவுக்கு எந்த பொருட்களும் இல்லாமல் போனதால், அந்த வீட்டில் தனியாக இருந்த அந்த இளம் பெண்ணை தாக்கி, அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்
இதனையடுத்து, அந்த திருடன் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், குன்றத்தூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளார்.
இந்த பாலியல் பலாத்காரம் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனான சதீஷ் என்பதை போலீசார் கண்டுப்பிடித்தனர்.
இதனையடுத்து, போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், வண்டலூர் – மீஞ்சூர் சாலையில் மறைந்து இருந்த சதீசை அதிரடியாக மடக்கிப் பிடித்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்
இதனையடுத்து, அந்த இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இந்த விசாரணையில், இளைஞன் சதீஷ், அதே பகுதியில் உள்ள தனியார் தண்ணீர் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்தார்.
இவர் வேலைக்கு செல்லும் போது பாதிக்கப்பட்ட அந்த பெண் வீட்டின் பால்கனியில் நின்று செல்போனில் பேசுவதை அடிக்கடி பார்த்திருக்கிறார்.
அத்துடன், இந்த சதீஷ் அந்த பகுதியில் ஆண்கள் இல்லாத வீடுகள் மற்றும் ஆட்கள் யாரும் இல்லாமல் பூட்டிக் கிடக்கும் வீடுகளை குறிவைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அப்போது, அந்த இளம் பெண்ணை மாடியின் நின்று அடிக்கடி போன் பேசுவதை பார்த்த சதீஸ், அந்த வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டார்.
அதன்படி, அந்த வீட்டில் திருட வேண்டும் என்று திட்டமிட்டான்.
சம்பவத்தன்று போதையில் நள்ளிரவு நேரத்தில் அந்த வீட்டிற்குள் நுழைந்து, அந்த வீட்டின் கதவை தட்டி உள்ளார்.
அப்போது, “தனது அக்கா தான் கதவை தட்டுகிறார்” என்று, நினைத்து அந்த இளம் பெண், கதவை திறந்திருக்கிறார்.
ஆனால், அந்த இளம் பெண் கதவை திறந்தவுடன் அந்த பெண்ணின் முகத்தில் பலமாக தாக்கி விட்டு, வீட்டின் உள்ளே நுழைந்து கதவை சாத்தி கொண்டிருக்கிறார்.
அத்துடன், அந்த இளம் பெண்ணிடம் “உனது செல்போன், பணம், நகை ஆகியவற்றை தரும்படி” கேட்டிருக்கிறார்.
ஆனால், அதற்கு அந்த இளம் பெண், “என்னிடம் ஏதும் இல்லை” என்று, அந்த பெண் கூறி அழுது உள்ளார்.
இதனால், கடும் கோபம் அடைந்த அந்த திருடன், இந்த இளம் பெண்ணை கடுமையாக தாக்கி பலவந்தமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
பின்னர் போதையில் அங்கேயே படுத்து தூங்கிய சதீஷ், “அடுத்த 2 நாட்களில் எனக்கு 10 ஆயிரம் ரூபாய் நீ ரெடி பண்ணி தர வேண்டும்” என்று, அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார்.
இதனையடுத்து, அவன் அங்கிருந்து தப்பித்து சென்றிருக்கிறான்.
இச்சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
