Connect with us

    தோழியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்; ஏமாற்றி விட்டு சென்ற தோழியால் நடுத்தெருவுக்கு வந்த பரிதாபம்…!!

    Jayasudha Senthila

    Tamil News

    தோழியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்; ஏமாற்றி விட்டு சென்ற தோழியால் நடுத்தெருவுக்கு வந்த பரிதாபம்…!!

    மதுரையில் தனது உயிர் தோழியை கட்டாயப்படுத்தி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யவைத்து, திருமணம் செய்து குடும்பம் நடத்தி விட்டு ஏமாற்றிச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    Jayasudha Senthila

    மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகள் ஜெயசுதா.

    இவர் மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள பூங்கா முருகன் கோவில் வந்த போது ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த ரவி மகள் செந்திலா என்பவருடன் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    செந்திலா ஊர்க்காவல்படையில் இருந்துள்ளார்.

    இருவரும் ஒருவர் மீது ஒருவர் உயிருக்கு உயிராக பழகி மதுரையின் பல்வேறு இடங்களில் ஒன்றாக ஊர் சுற்றியுள்ளனர்.

    இந்நிலையில். இருவரின் வீட்டிற்கும் தோழிகள் நெருக்கமாக பழகுவது தெரியும்.

    இந்நிலையில் வீட்டிற்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கின்றனர்.

    அப்போது செந்திலா, ஜெயசுதாவிடம் பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் இந்த சமுதாயம் கேலி பேசும். எங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    நீ ஆணாக மாறிவிட்டால் வீட்டில் யாருக்கும் தெரியாது எனக் கூறியதோடு, ஆணாக மாற வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது.

    அதன்படி, கடந்த டிசம்பர் 2021-இல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு அறுவை சிகிச்சையும் செய்ததாக கூறப்படுகிறது.

    பெண்களுக்கே உரித்தான மார்பகம் ஆபரேசன் செய்து அகற்றப்பட்டது.

    அதோடு ஹார்மோன் ஊசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தியதன் பேரில் ஹார்மோன் ஊசியும் போட்டு வந்துள்ளார் ஜெயசுதா.

    அறுவை சிகிச்சைக்குப் பின்பு ஜெயசுதா என்கிற பெயரை ஆதிசிவன் என மாற்றி, இருவரும் தைப்பொங்கல் அன்று திருப்பரங்குன்றம் மலைக்கு பின்னால் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.

    Jayasudha Senthila

    செந்திலாவின் பெற்றோர்கள் அவரை இரண்டு மூன்று நாட்கள் தேடிய நிலையில் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் ஆதிசிவனுடன் திருமணமாகி திருப்பரங்குன்றத்தில் ஒன்றாக வாழ்ந்து வருவதாக செந்திலா தனது அம்மாவிற்கு போன் செய்து கூறியுள்ளார்.

    இதையடுத்து செந்திலாவை வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொண்ட மாப்பிள்ளையின் விவரம் குறித்து விசாரித்தபோது, தோழியாக இருந்த ஜெயசுதாவை தான் ஆணாக மாற்றி திருமணம் செய்துகொண்டது பற்றி  செந்திலா தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் செந்திலாவின் உடைமைகளையும், பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செந்திலா பெற்றோர்கள் புகாரும் கொடுத்துள்ளனர்.

    புகாரின்பேரில் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதில் செந்திலா ஆதிசிவனுடன் ஒன்றாக வாழ பிடிக்கவில்லை என்றும், தனது பெற்றோருடன் செல்வதாகவும் கூறிவிட்டார்.

    ஜெயசுதா என்ற ஆதிசிவனுடன் செல்ல மறுத்த நிலையில் காவல்நிலையத்தில் இருதரப்பினரிடமும் எழுதி வாங்கிவிட்டு அனுப்பிவிட்டனர்.

    நடந்த நிகழ்வுகள் குறித்து செந்திலாவின் பெற்றோர்கள் கூறியபோது,

    இது சம்பந்தமாக போலீஸ் ஸ்டேஷனில் பேசி முடித்துக் கொண்டோம் எதுவும் கேட்காதீர்கள் என்றும் கூறிவிட்டார்.

    ஆனால் அந்த தெருவில் உள்ளவர்கள் அனைவரும் சுதாவின் பரிதாப நிலையை பார்த்து மனம் வருந்துகின்றனர்.

    ஆணாக மாற தனது உடலை அறுத்து விட்டு நிற்கும் ஜெயசுதாவோடு தான் செந்திலா வாழ வேண்டும் என கூறுகின்றனர்.

    மேலும், இவளை இந்த நிலைக்கு தள்ளிய அவர்கள் நல்லா இருக்க மாட்டார்கள் என ஒட்டுமொத்தமாக ஆதங்கத்தோடு கூறினர்.

    அதோடு ஜெயசுதாவை பார்த்து எங்கள் ஊரில் இருக்கும் பொம்பள பிள்ளைகளும் கெட்டுப் போய்விடும் அதனால் இந்த ஊரில் இவளை இருக்க விட மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

    தற்போது உடல் உறுப்பையும் இழந்து பணத்தையும் இழந்து, தாய் – தந்தையும் வீட்டில் சேர்த்து கொள்ளாததால் காதலிக்காக பெண்ணாக மாறிய ஜெயசுதா ரோட்டில் அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!