Connect with us

    ஜவுளிக்கடையில் திருடச் சென்ற திருடன்; கல்லாவில் பணம் இல்லாததால், ஆண் பொம்மையின் ஆடைகளை கழட்டி, கட்டிப்பிடித்து சுய இன்பம்; வெளியானது சிசிடிவி காட்சிகள்..!

    Thief

    Tamil News

    ஜவுளிக்கடையில் திருடச் சென்ற திருடன்; கல்லாவில் பணம் இல்லாததால், ஆண் பொம்மையின் ஆடைகளை கழட்டி, கட்டிப்பிடித்து சுய இன்பம்; வெளியானது சிசிடிவி காட்சிகள்..!

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆண்கள் ஆடையகத்தில் இரவில் புகுந்த திருடன், கல்லாவில் பணம் இல்லாத விரக்தியில் பொம்மையுடன் சுய இன்பத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Thief

    நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் ஆண்கள் ஆடையகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இதனை குளச்சல் பகுதியை சேர்ந்த ஜோசப் பவின்(39) என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

    நேற்று காலையில் கடை திறக்க வந்த போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு காணப்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஜோசப் பவின் கோட்டார் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில், ஆண்கள் ஆடையகத்தின் பின்பக்க கதவை உடைந்த கொள்ளையன் கடைக்குள் சென்று பணம் உள்ளதா என பார்த்துள்ளார்.

    பணம் எதுவும் கிடைக்காத நிலையில் சுமார் 20,000 மதிப்பிலான துணிகளை கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது.

    இந்நிலையில், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அங்கு விளம்பரத்தற்காக வைக்கப்பட்டிருந்த ஆண் உருவ பொம்மையின் ஆடைகளை கழற்றி அதனுடன் சுய இன்பத்தில் கொள்ளையன் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    ஆண்பொம்மையுடன் சுய இன்பத்தில் ஈடுபட்ட கொள்ளையனின் செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!