Viral News
கோவிலில் நகையை திருடி விட்டு, வெளியேற முயற்சித்த போது ஓட்டைக்குள் மாட்டிக் கொண்ட திருடன்; வெளியான வைரல் வீடியோ..!!
கோவிலில் நகையை திருடி விட்டு, வெளியேற முயற்சித்த போது ஓட்டைக்குள் மாட்டிக் கொண்ட திருடன் ஊர் மக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கி போலீசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஜடிமுடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வருவதுண்டு.
இங்குள்ள அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்ட நகைகளை திருடுவதற்காக பாப்பாராவ் என்ற இளைஞர் கோவிலுக்குள் புகுந்துள்ளார்.
அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகளை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து செல்ல அங்குள்ள ஓட்டை வழியாக வெளியேற முயற்சித்துள்ளார்.
ஆனால் அவருடைய பாதி உடல் கோவிலுக்கு உள்புறமும், மற்றொரு பாதி உடல் கோயிலுக்கு வெளிப்புறமும் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டார்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு உடனடியாக தகவலை கொடுத்தனர்.
மேலும் அந்த இளைஞரை கோட்டையில் இருந்து மீட்டு அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர்.
அங்கு விரைந்து வந்த போலீஸார் அந்த இளைஞரை கைது செய்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த இளைஞரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த இளைஞர் மதுபோதையில் இவ்வாறு திருட்டில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறையிடம் பாப்பாராவ் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
