Connect with us

    காதலித்து பழகி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காதலனுக்கு திருமணத்தன்று சரியான ஆப்பு வைத்த டிக்டாக் தேவதை..!

    Tiktok shyamala

    Tamil News

    காதலித்து பழகி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காதலனுக்கு திருமணத்தன்று சரியான ஆப்பு வைத்த டிக்டாக் தேவதை..!

    சிங்கப்பூரில் டிக் டாக்கில் பழகிய பெண்ணை ஏமாற்றிவிட்டு, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு வந்த இளைஞர் மீது சிங்கப்பூர் பெண் ஆன்லைன் புகார் அளித்த நிலையில், அவரை திருமணம் செய்ய இருந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Tiktok shyamala

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்தவர் புத்தூரணி பிரபு இவர் சிங்கப்பூரில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே அங்கு டிக்டாக்கில் வீடியோக்கள் பதிவிட்டு வந்துள்ளார்.

    டிக் டாக் மூலம் சிங்கப்பூர் வாழ் இந்திய பெண்ணான சியாமளா என்பவரும் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இருவரும் இணைந்து பல டிக் டாக் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் பிரபு சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டார்.

    இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள சியாமளா பிரபு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடைய வீட்டிலேயே தங்கி இருந்ததாக கூறியுள்ளார்.

    மேலும் தேவகோட்டைக்கு தனது தாயாருக்கு ஒரு கடை அமைத்து தருவதாக கூறிவிட்டு சென்றவர் அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும் சிங்கப்பூரில் இருந்து சியாமளா ஆன்லைன் மூலம் சிவகங்கை மாவட்ட எஸ்பிக்கு புகார் மனு ஒன்று அனுப்பினார்.

    இந்த புகார் மீது விசாரணை செய்த தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் சரவணன் கூறும் பொழுது சிங்கப்பூரிலிருந்து ஆன்லைனில் சியாமளா என்பவர் புகார் அளித்துள்ளார்.

    பிரபுவும் சியாமளாவும் டிக் டாக்கில் பல வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர். இருவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

    ஆனால் பிரபு சிங்கப்பூர் பெண் சியாமளாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியதற்கான ஆதாரங்கள் எதுவும் சியாமளா தங்களுக்கு அனுப்ப வில்லை என்றார்.

    பிரபுவிடம் விசாரணை செய்ததில் சிங்கப்பூரில் சியாமளா ஏற்கனவே திருமணம் ஆகியதை மறைத்து தன்னிடம் பழகினார் என்றும் இது தெரிந்ததால் தான் அங்கிருந்து சொந்த ஊர் திரும்பி விட்டதாகவும் வீட்டில் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை மறுமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

    இரு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி மீண்டும் விசாரணைக்கு அழைத்து விசாரணை செய்ய உள்ளோம் என்று போலீசார் கூறியுள்ள நிலையில், நேற்று தேவகோட்டையில் பிரபுக்கும் கன்னங்குடியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில் திருமணத்தன்று பிரபு குறித்த தகவல்கள் தெரிய வந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!