Tamil News
குப்பைக் கிடங்கிற்கு தீவைத்து அதன் முன் ஸ்லோ மோஷனில் நடந்து வந்து ரீல்ஸ் வெளியிட்ட சுகாதார ஆய்வாளர்; வைரல் வீடியோவால் பரபரப்பு..!
மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு தீ வைத்து அதன் முன்னால் சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விவேக்.
அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்த்த விவேக் அதில் கதா நாயகன் மளமளவென பற்றி எரியும் தீக்கு முன் மாஸாக நடந்துவரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இதேபோல் தானும் வீடியோ எடுக்க வேண்டும் என ஆசைப்பட்ட சுகாதார ஆய்வாளர் விவேக் ஆசைப்பட்டுள்ளார்.
இதற்காக திருப்பத்தூர் ப.உ.ச நகர் பகுதியிலுள்ள குப்பை கிடங்கிற்குச் சென்று குப்பைக்கு தீ வைத்து எரித்து, எரியும் குப்பை முன்பு, ஸ்லோ மோஷனில் நடந்து வந்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து, தனது மாஸை காட்டியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது திருப்பத்தூரில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் நகராட்சி ஊழியரே இதுபோன்று பொறுப்பில்லாமல் ரீல்ஸ் வீடியோ எடுத்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வீடியோவைக் கண்ட நகராட்சி உயர் அலுவலர்கள், வீடியோ எடுப்பதற்கு உதவியாக இருந்த ஒரு ஊழியரை மட்டும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இச்சம்பவம் திருப்பத்தூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
