Connect with us

    பிளஸ் டூ தேர்வில் 417 மதிப்பெண்கள்; இரட்டையர்கள் ஒரே மாதிரி எடுத்த அதிசயம்..!

    Tamil News

    பிளஸ் டூ தேர்வில் 417 மதிப்பெண்கள்; இரட்டையர்கள் ஒரே மாதிரி எடுத்த அதிசயம்..!

    12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டிருந்தது.

    இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

    திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்-அக்நெல் தம்பதியினர்.

    இவர்களுக்கு ரோகித் ராஜா மற்றும் ரோஷன் ராஜா என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டையர் ஆவர்.

    இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

    இந்தாண்டு நடைப்பெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வைவும் இந்த இரட்டை சகோதரிகள் சேர்ந்த எழுதினேர்.

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் தேர்வு முடிவுகள் வெளியானது.

    இந்நிலையில் நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத் தேர்வில், இரட்டையர்களான ரோகித், ரோசன் இருவரும் 417 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    நாங்கள் பிறப்பில் மட்டும் இரட்டைப் பிறவி அல்ல. மதிப்பெண்கள் எடுப்பதிலும் ஒரே மாதிரி மதிப்பெண்தான் எடுப்போம் என்று பிளஸ் டூ பொதுத் தேர்வில் இரட்டைப் பிறவியான இருவரும் சொல்லிவைத்தாற் போல்,417 மதிப்பெண் எடுத்த சம்பவம் பள்ளியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவர்கள் இருவரையும் அப்பகுதியில் உள்ள மக்கள் பாராட்டினர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!