Connect with us

    பல் துலக்கும்போது பெண்ணின் வாயில் குத்தி கன்னத்தின் வழியாக வெளியே வந்த டூத் பிரஷ்; பின்னர் நடந்த சம்பவம்..!

    Woman brush

    Tamil News

    பல் துலக்கும்போது பெண்ணின் வாயில் குத்தி கன்னத்தின் வழியாக வெளியே வந்த டூத் பிரஷ்; பின்னர் நடந்த சம்பவம்..!

    பல் துலக்கும்போது பெண்ணின் வாயில் சிக்கிய டூத்பிரஷை ஆப்ரேஷன் செய்து முகத்தின் வழியாக அகற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    Woman brush

    காஞ்சிபுரம் எண்ணெய்காரத் தெருவை சேர்ந்தவர் ரேவதி (வயது 34).

    இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் வைத்து பல் துலக்கி கொண்டிருந்தார்

    அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பல் தேய்க்கும் பிரஸ் ரேவதியின் ஒரு பக்க கன்னத்தை கிழித்து மறுபுறம் சென்றுள்ளது.

    இதில் பல் தேய்க்கும் பிரஸ் அவரது வாய் பகுதியில் சிக்கி பலத்த காயம் அடைந்தது.

    இதனால் வாயைத் திறக்க முடியாமலும் மூட முடியாமலும் அலறிய ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அரசு தலைமை மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நரேன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர்கள் ஆலோசனை செய்து ரேவதியின் கன்னத்தின் வழியாக டூத் பிரஷை அகற்றலாம் என முடிவெடுத்தனர்.

    இந்நிலையில் நேற்று ரேவதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி ரேவதிக்கு வலி ஏற்படாமல் இருக்க மயக்க மருந்து செலுத்தி வாயின் பல் இடுக்குகளில் வசமாக சிக்கிக் கொண்டிருந்த டூத் பிரஷை முகத்தின் வெளிப்புறத்தின் காதில் கீழே துளையிட்டு கண்ணத்தின் வழியாக வெளியே வந்த டூத் பிரஷின் பாதியை வெட்டி எடுத்தனர்.

    அதேபோல் வாயில் பல் இடுக்குகளின் மத்தியில் மிக ஆழமாக சிக்கிக்கொண்டிருந்த டூத் பிரஷின் பாதியை ஆப்ரேஷன் செய்து வாயிலிருந்து அகற்றினர்.

    இதை அடுத்து அவர் குணமான நிலையில் சாதரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

    பல் துலக்கும் போது பிரஸ் வாயில் சிக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    மேலும், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!