Connect with us

    கணவனை கர்ப்பமாக்கிய மனைவி; கொலம்பியா நாட்டு மாடல் அழகி நிகழ்த்திய அதிசயம்..!

    Danna Sultana y Esteban Landrau

    World News

    கணவனை கர்ப்பமாக்கிய மனைவி; கொலம்பியா நாட்டு மாடல் அழகி நிகழ்த்திய அதிசயம்..!

    கொலம்பியாவை சேர்ந்த திருநங்கை – திருநம்பி தம்பதி இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

    Danna Sultana y Esteban Landrau

    டான்னா சுல்தானா ஒரு மொடல் ஆவார், ஆணாக பிறந்த இவர் இப்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார், ஒரு திருநங்கை ஆவார்.

    அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார், ஒரு திருநம்பி ஆவார்.

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர்.

    அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியிருந்தாலும் அவரது உடலில் கர்ப்பம் தரிப்பதற்கான பெண்ணுறுப்புகளை அவர் அறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

    இதனையடுத்து, அவர் கர்ப்பமானார்.

    தனது கணவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சுல்தானா சமூக வலைதளங்களில் பதிவிட்டும் இருந்தார்.

    Danna Sultana y Esteban Landrau

    அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் பலரையும் குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.

    அதேபோல, மருத்துவர்களும் இது எப்படி சாத்தியமானது என்று குழம்பி உள்ளனர்.

    எனினும், சுல்தானா மற்றும் எஸ்டெபன் இருவருக்கும், இயற்கையான பிறப்பு உறுப்புகள் இருப்பதால், இந்த தம்பதியினர் தங்கள் குழந்தையை இயற்கையாக கருத்தரிக்க முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அதாவது பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த போதிலும் சில உறுப்புகளை இயற்கை கொடுத்த முறையில் அப்படியே விட்டு மற்றாமல் இருந்ததால் அது சாத்தியமாகியுள்ளது.

    இது முதன்முறையல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக, Tristan Reese மற்றும் Biff Chaplow தம்பதி இதே போல இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!