Connect with us

    வேலூரில் 37-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி..!!

    Transgender Ganga nayak

    Uncategorized

    வேலூரில் 37-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி..!!

    வேலூர் மாநகராட்சியில் 37-வது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார்.

    Transgender Ganga nayak

    தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன.

    இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.

    தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன.

    பல வார்டுகளில் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட வேலூரில் போட்டியிட்ட திருநங்கை கங்கா தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

    வேலூர் மாநகராட்சியின் 37 ஆவது வார்டில் திமுக வேட்பாளராக கங்கா போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

    இவர், கடந்த 2002ம் ஆண்டு திருநங்கைகள் நல வாரிய உறுப்பினராக இருந்தவர்.

    மேலும் திருநங்கைகள் நலனுக்காகவும், அவர்களின் வாழ்கை முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

    தற்போது திருநங்கை கங்கா நாயக் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!