Tamil News
தென்காசி பேருந்து நிலையத்தில் 7 திருநங்கைகள் இரு வாலிபரிடம் செய்த மோசமான செயல்…!
தென்காசி பேருந்து நிலையத்தில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 7 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி பேருந்து நிலையத்தில் திருநங்கைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் பயணிகளிடம் அடாவடியாக பணம் கேட்டு வசூல் செய்கின்றனர்.
பணம் இல்லை என்று சொன்னால், அவர்களை திட்டி அவர்களிடம் வம்பு செய்கின்றனர்.
அய்யாபுரம் கிராமத்தை சேர்ந்த மணிக்குமார் என்ற இளைஞரை கடந்த மாதம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து ஐந்து திருநங்கைகள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஐந்து திருநங்கைகளை கைது செய்தனர்.
மேலும், தென்காசி மாவட்டம் பூலாங்குடியிருப்பு சேர்ந்த மாரியப்பன் (வயது 55) என்பவர் தன்னிடம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து சுமார் 18 கிராம் செயினை 2 திருநங்கைகள் திருடியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் தென்காசி காவல் நிலையத்ததில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையில் பெண் உதவி ஆய்வாளர் செல்வி மற்றும் பெண் மு.நி.கா. மலர்கொடி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு, செயினை திருடிய திருநங்கைகள் மாரி @ புஷ்பா ஸ்ரீ, மணிகண்டன் @ மதுபாலா ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 1 லட்சம் மதிப்புள்ள 18 கிராம் தங்க செயின் மீட்கப்பட்டது.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
