Viral News
ஒரே நேரத்தில் 3 பெண்களுடன் திருமணம் செய்து அவர்களுடன் ஒரே நேரத்தில் முதலிரவு கொண்டாடிய மச்சக்கார மாப்பிள்ளை..!
ஒரே நேரத்தில் 3 பெண்களை, 42 வயது நபர் திருமணம் செய்துள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பினை உண்டாக்கியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்பஞ்ச் (42).
இவர் போபாலிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நன்பூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.
இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் 3 பெண்களை காதலித்து வந்தார்.
அதுவும் பல வருடங்களாகவே, 3 பெண்களையும் ஒரே நேரத்தில் காதலித்து வந்தார்.
அந்த பெண்களும் இவரை உயிருக்கு உயிராக விரும்பினார்கள்.
அதனால், வேறு யாரையும் கல்யாணமும் செய்து கொள்ளவில்லை..
பிறகு சர்பஞ்ச், குடும்பம் நடத்தாமலேயே, தனித்தனியாக ஒவ்வொரு பெண்ணுடனும் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்தார்.
ஒரு வருடம், 2 வருடம் இல்லை.
இப்படியே 15 வருடங்களாகவே வாழ்ந்து வந்தனர்.
3 பெண்களும் சர்பஞ்சுடன் குடும்பம் நடத்தி 6 குழந்தைகளையும் பெற்று கொண்டனர்.
இப்போது விஷயம் என்னவென்றால், 42 வயதாகிவிட்டதால், கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று யோசித்துள்ளார் சர்பஞ்ச்.
ஒருவரை விட்டு இன்னொருவரை திருமணம் செய்ய முடியாது என்பதால், 3 காதலிகளையும் திருமணம் செய்ய முடிவெடுத்தார். அதற்கான நாள் குறித்தார்.
மோரி பாலியா கிராமத்திலேயே திருமண ஏற்பாடு நடந்தது.
ஒரே மேடையில் 3 பெண்களுக்கும் தாலி கட்டினார்.
3 பெண்களுடனும் ஒரே நேரத்தில் முதலிரவும் நடத்தி உள்ளார்.
இந்த வினோத நிகழ்வுதான் சோஷியல்மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அங்குள்ள பழங்குடி வழக்கப்படி இந்த திருமணம் மூன்று நாட்கள் நீடித்துள்ளதுதான் சிறப்பம்சமாகும்.
அதைவிட இன்னொரு ஹைலைட் என்னவென்றால், இவர்களின் திருமணத்தில், அவர்களின் 6 குழந்தைகளும் பங்கேற்றுள்ளன.
நெட்டிசன்கள் இந்த போட்டோக்களை ஷேர் செய்தும், வாழ்த்தியும் வருகிறார்கள்.
இந்த திருமணம் குறித்து, அலிராஜ்பூர் கலெக்டர் ராகவேந்திர சிங்கிடம் கருத்து கேட்டபோது, ‘பழங்குடியினர் சமுதாயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வது சட்டப்படியானதா? என்று இப்போதைக்கு என்னால் கருத்து சொல்ல முடியாது.
ஆனால் பழங்குடியினருக்கென தனியாக பழக்க வழக்கங்கள், சடங்குகள் உள்ளன. அவற்றை நாம் மதிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை’ என்றார்.
ஒரே மேடையில் 3 பெண்களுக்கும் தாலி கட்டியது குறித்து சர்பஞ்ச் சொல்லும்போது,
‘போபாலில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நன்பூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான நான், 2003ல் என்னுடைய முதல் காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டேன்.
கடந்த 15 ஆண்டுகளாக, என்னுடைய மற்ற இரண்டு பெண்களும் திருமணமாகாமலே என்னுடன் வாழ்ந்து வந்தனர்’ என்றார்.
ஆனால், 15 வருடம் கழித்து திருமணம் செய்தது ஏன் என்பதற்கும் சர்பஞ்ச் விளக்கம் தந்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்த 3 பெண்களையும் திருமணம் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லையாம்.
இவர் சட்டப்படி திருமணம் செய்யாததால், இவரையும், இவரது 3 காதலிகளையும், உள்ளூர் கோயில் விழாக்களில் பங்கேற்க பழங்குடியினர் அனுமதிக்கவில்லையாம்.
அதுமட்டுமல்ல, இவர்களது குழந்தைகளுக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
அதனாலேயே 3 காதலிகளையும், முறைப்படி திருமணம் செய்ய சம்ரத் மவுரியா முடிவு செய்ததாக கூறகிறார்.
