Tamil News
அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் நடமாடும் காட்டில் 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்றெடுத்த ஆதிவாசி பெண்…!!
மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதியில் அடர்ந்த காட்டிற்குள் 108 ஆம்புலன்சில் ஆதிவாசி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்சி மலையோர பகுதியில் விளாமலை பகுதியில் ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இன்று அதிகாலை ஸ்ரீ லேகா (25) என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கபட்டது.
அதன்பேரில், அஜிஷ் என்ற ஓட்டுனர் ஓட்டி வந்த ஆம்புலன்ஸ், அங்கு வந்து பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பேச்சிபாறை அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அவர்க ள் செல்லும் பாதை அடர்ந்த வனப்பகுதியாகும். அங்கு யானைகள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும்.
இந்நிலையில், செல்லும் வழியில் பிரசவ வலியால் அந்த பெண் துடித்தார்.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர், சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தினார்.
ஆம்புலன்சில் இருந்த அவசரகால மருத்துவ உதவியாளர் சரஸ்வதி, அந்த பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார்.
அப்போது, சுகபிரவசமாக அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாய் மற்றும் குழந்தையை மருத்துவ சிகிச்சை அளித்து பாதுகாப்பாக பேச்சிப் பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.அங்கு தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் பணியாளர்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
