Uncategorized
“இனி ஆபாச வீடியோ போட மாட்டேன்; விவசாய கூலி வேலைக்கு சென்று பிழைத்து கொள்வேன்” – போலீசாரிடம் கதறிய திருச்சி சாதனா…!!
சமூக வலைத்தளங்களில் ஆபாசமான செய்கைகள் மற்றும் அசிங்கமாக பேசி வரும் திருச்சி சாதனா குறித்த புகார்கள் வந்ததால், காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியதாகவும், இனிமேல் ஆபாசமாக பேசி நடிக்க மாட்டேன் என கையெடுத்து கும்பிட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
டிக்டாக் தொடக்கத்தில், ரவுடிபேபி சூர்யா, திவ்யாவுக்கு அடுத்தபடியாக, மக்களிடம் பிரபலமானவர் திருச்சி சாதனா.
சாதாரண கிராமத்து பெண்ணிடம் இவ்வளவு நடிப்புத்திறமை உள்ளதா? இந்த அளவுக்கு டான்ஸ் ஆடுவாரா? பாடுவாரா? என்று பலரையும் வியக்க வைத்தவர் சாதனா.
ஆனால், டிக்டாக் முடக்கத்திற்கு பிறகு, தனியாகவே யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அன்றாடம் தான் செய்யும் வேலைகள், உட்பட அனைத்தையுமே வீடியோவாக இவர் பதிவிட்டு வருகிறார்.
அதேசமயம், சாதனாவின் சில வீடியோக்கள் எல்லைமீறி இருப்பதாகவும், புகார்களும் சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு, காட்டுவாசியாக காட்டுக்குள் செய்த சேட்டைகள் அத்தனையும் பேசுபொருளானது.
பிறகு, கால்வாயில் குளித்து முடித்த வீடியோ வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை தந்தது..
அதைவிட, தன்னுடைய வீட்டில் அறைக்கதவை மூடிவிட்டு, செல்போனை ஆன் செய்து, பப்ளிக் பார்க்கும்படியாக, சேலை மாற்றியதை கண்டு பொதுமக்கள் கொதித்து போனார்கள்.
பல்வேறு தரப்பினரிடமிருந்து காவல்துறைக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது.
இதனையடுத்து, சாதனாவை குளித்தலை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், தங்களது பாணியில் ‘அன்பான’ அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
உடனே, ‘நான் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை வெளியிட மாட்டேன்’ என்று எழுத்துபூர்வமாக உறுதியளித்துள்ளார் சாதனா.
அதையே பேசி ஒரு வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சாதனா கூறியபோது,
“நான் ஆபாச வீடியோக்கள் போட்டது தவறு தான். இனிமேல் இதுபோன்ற வீடியோக்கள் போட மாட்டேன்.
போலீசார் கூப்பிட்டு என்னை விசாரித்தனர். என் மீது யாரோ புகார் கொடுத்துள்ளனராம்.
எனது மனநிலையே சரியில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட தோன்றுகிறது.
எனது பெண் குழந்தைகளுக்காக வாழ்கிறேன். இனிமேல் விவசாய கூலி வேலை பார்த்து கூட பிழைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்” என்றார்.
https://www.instagram.com/reel/CdNj_TQg9eE/?igshid=YmMyMTA2M2Y=
