Connect with us

    நள்ளிரவில் மனைவியை இழுத்து கொண்டு போய் அவரது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்..!

    Wedding

    Viral News

    நள்ளிரவில் மனைவியை இழுத்து கொண்டு போய் அவரது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்..!

    திரிபுரா மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் ஒருவர் அவரது கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்த சம்பவம் அந்த மாநில மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    Wedding

    வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில் இளம் தப்பதி வசித்து வந்துள்ளனர்.

    திருமணமான புதிதில் இந்த தம்பதி இல்லற வாழ்க்கையை இனிமையாக துவங்கினர்.

    இந்நிலையில் சமீப காலமாக அந்த பெண்ணின் கணவருக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

    இதன் காரணமாக இவர்களுக்கிடையே அவ்வப்போது சச்சரவுகள் ஏற்பட்டதுள்ளது.

    இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அந்த கணவர் தனது மனைவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்.

    திரிபுரா மாநிலத்தின் தெலியமுரா காவல் நிலைய பகுதி அருகே அமைந்துள்ள மத்திய கிருஷ்ணாபூர் பகுதிக்கு கடந்த சனிக்கிழமை தனது மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார் அந்த கணவர்.

    வயல் பகுதிக்கு மனைவியை கூட்டிச்சென்ற கணவர் திடீரென அவரை தாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அங்கே மயக்கமாக இருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அந்த பெண்ணுக்கும் அவரது கள்ளக்காதலர் என சந்தேகிக்கும் நபருக்கும் அந்த பெண்ணின் கணவர் திருமணம் செய்து வைத்தது தொடர்பான வீடியோ வெளியானது.

    மேலும் சம்பவம் குறித்து அந்த பெண்ணின் கணவர் கூறுகையில், ‛‛கள்ளக்காதல் இருந்ததால் தான் மனைவியை தாக்கி அந்த நபருடன் திருமணம் செய்து வைத்தேன்.

    இந்த தாக்குதலில் மனைவி மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதித்தேன்.

    அங்கேயே இரவு முழுவதும் கழித்தேன்” என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதில், தனது கணவர் உட்பட 15 பேர் தன்னை வயல்வெளிக்கு அழைத்து சென்றதாகவும் அங்கே அவர்கள் தன்னை தாக்கியதாகவும் தனது காதலன் எனக் கூறப்படும் இளைஞரை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

    தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தான் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் தெரிவித்திருக்கிறார்.

    இந்த சம்பவம் குறித்து இதுவரையில் 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரிடையே காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திரிபுராவில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே கட்டாய திருமணம் செய்துவைத்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!