Connect with us

    டியூசன் படிக்க வந்த +2 மாணவனை காதல் வீழ்த்தி 3 ஆண்டுகளாக நெருக்கமாக பழகிய டீச்சர்; திடீரென உறவை முறித்ததால் மாணவன் எடுத்த விபரீத முடிவு…!

    Teacher sharmila

    Tamil News

    டியூசன் படிக்க வந்த +2 மாணவனை காதல் வீழ்த்தி 3 ஆண்டுகளாக நெருக்கமாக பழகிய டீச்சர்; திடீரென உறவை முறித்ததால் மாணவன் எடுத்த விபரீத முடிவு…!

    சென்னை அம்பத்தூர் அருகே டியூசன் படிக்க வந்த மாணவனை ஆசிரியை ஒருவர் காதலித்து 3 ஆண்டுகளாக ஜாலியாக இருந்து விட்டு ஏமாற்றிய விரக்தியில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    Teacher sharmila

    சென்னை அம்பத்தூர், கள்ளிகுப்பம், கங்கை நகர், வைகை தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் ரகு (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

    17 வயதான இவர் 12-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு கல்லூரியில் சேர காத்திருந்து வந்தார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி ரகு தனது நண்பர்களுடன் சென்னை, மாநிலக் கல்லூரிக்கு கலந்தாய்வுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். அதன் பிறகு ரகு தனது வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப் பார்த்த பெற்றோர் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ரகு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதன் பிறகு,உறவினர்கள் சடலத்தை வீட்டுக்கு எடுத்து சென்றனர். பின்னர் தகவல் அறிந்து அம்பத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதில் கிருஷ்ணகுமார் அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற போது அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த சர்மிளா என்ற ஆசிரியை நடத்தி வந்த டியூஷனில் கடந்த 3 ஆண்டுகளாக படித்து வந்துள்ளார்.

    அப்பொழுது மாணவன் கிரிஷ்ணகுமாருக்கும் ஆசிரியர் சர்மிளாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனிடையே ஆசிரியை சர்மிளாவிற்கு அவரது வீட்டில் திருமண வரன் பார்த்து வந்துள்ளனர்.

    இதன் காரணமாக அவர் மாணவனுடனான நட்பை துண்டித்து வந்துள்ளார்.

    மேலும் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டதால் ஆசிரியை மாணவனுடனான தொடர்பை முழுவதுமாக துண்டித்து விட்டார்.

    இதனால் மாணவன் பலமுறை ஆசிரியை சர்மிளாவை பேசமுயன்றுள்ளார்.

    எனினும் ஆசிரியை காதலை தொடர மறுத்ததால் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த ஆசிரியை தவிக்க விட்டு சென்று விட்டாலே என நினைத்து மாணவன் விரக்தியில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

    இதன் பின்னர் அவரது மொபைலை ஆய்வு செய்ததில் இவை அனைத்தும் வெளி வந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!