Viral News
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நபர்; கட்டுக் கட்டாக மிதந்து வந்த ரூ.500 நோட்டுகள்; எடுத்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி..!
கேரளாவில் ஆற்றிங்கல் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த நபருக்கு ரூ.500 நோட்டுக் கட்டுகள் கிடைத்துள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் ஆற்றிங்கல் பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு பெரிய தெர்மோகோல் பெட்டிகள் ஆற்றில் மிதந்து வருவதை பார்த்துள்ளார்.
எதேச்சையாக அதனை பிரித்து பார்த்த போது அவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.
உள்ளே 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்துள்ளது. இதனை கண்ட அந்த நபர் அதனைப் பார்த்து திகைத்து நின்றார்.
ஆனால் அந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரம் கூட நிலைக்கவில்லை. அந்த 500 ரூபாய் நோட்டுகளை கூர்ந்து கவனித்த போதுதான் தெரிய வந்தது அவை சினிமா ஷூட்டிங் பயன்பாட்டிற்காக அச்சிடப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள் என்று.
அந்த ரூபாய் நோட்டின் ஒரு பகுதியில் ‘Only For Shooting Purpose’ என எழுதியிருந்ததை கண்டு மீண்டும் அதிர்ந்தார்.
500 ரூபாய் நோட்டுகள் நீரில் அடித்து வந்து தன்னிடம் சேர்ந்ததும் அடைந்த மகிழ்ச்சி திடீரென காணாமல் போனதால் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளானார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் அந்த இரண்டு போலி ரூபாய் அடங்கிய பெட்டிகளை கைப்பற்றி இது தொடர்பாக விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஆற்றில் இரண்டு பெட்டிகள் மிதந்து வருவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
