Tamil News
“அவ என் ஆளு, இனி அவகிட்ட பேசாத; டேய்! அவ என் ஆளுடா” – கள்ளக்காதலிக்காக மோதிய இரு வாலிபர்கள்; முடிவில் என்ன ஆச்சு தெரியுமா..??
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கணவனை இழந்த பெண்ணுக்காக ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காந்திநகரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சக்திவேல் மற்றும் களத்துமேடு பகுதி சேர்ந்த சுமன் ஆகியோர் நண்பர்கள்.
செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பூமிகா. இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் பூமிகாவின் நடவடிக்கை பிடிக்காமல் பூமிகாவின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில், பூமிகா மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில், பண்ருட்டியில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்தார்.
வேலை நேரம் போக பூமிகா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுகொண்டு பரவசமாக இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையில் அடிக்கடி ஆட்டோவில் சவாரி செல்லும்போது பூமிகாவுக்கு சுமனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் காதலர்களாக பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சுமனின் நண்பன் சக்திவேலுவுடன் பூமிகா பழகியுள்ளார்.
பின்னர் சக்திவேலுவையும் காதல் வலையில் பூமிகா வீழ்த்தியுள்ளார்.
சக்திவேலுவுடன் நெருங்கி பழக்க தொடங்கிய பூமிகா சுமனுடன் பேசுவதையும், பழகிவிதையும் நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதை கேள்விப்பட்ட சுமன் ஆத்திரமடைந்து சில தினங்களுக்கு முன்பு சக்திவேலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதலாக உருவாகியது.
இதை அடுத்து கடந்த 9ம் தேதி அன்று இரவு சமாதானம் பேசுவதாக சக்திவேலை சுமன் வரவழைத்துள்ளார்.
சுமன் பேச்சை நம்பி சக்திவேல் தட்டாஞ்சாவடி காளி கோயில் பின்புறம் உள்ள சுடுகாட்டு பாதையில் சந்தித்துள்ளனர்.
அப்போது, சக்திவேல் மற்றும் சுமன் உட்பட மூன்று நண்பர்கள் மது போதையில் இருந்தபோது பூமிகா விவகாரத்தில் இனி தலையிடக்கூடாது என்று சுமன் கண்டித்துள்ளார்.
அப்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் சுமன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேலை கொடூரமான முறையில் தலை, கை பகுதிகளில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
தகவல் அறிந்து வந்து புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஆட்டோ டிரைவர் சக்திவேல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் கைது செய்யக்கோரி சக்திவேலின் உறவினர்கள் பண்ருட்டி சேலம் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்த பிறகு உறவினர்கள் சாலைமறியலை கைவிட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
