Uncategorized
என் புருஷன் 15 நாள் உனக்கு; உன் புருஷன் 15 நாள் எனக்கு; இரு பெண்களிடையே ஏற்பட்ட பகீர் உடன்பாடு..!
குடும்ப பிரச்சனை காரணமாக ஒரு வீட்டை இரண்டாக பிரித்து கேள்விபட்டிருப்பீர்கள், அல்லது நிலம், சொத்து பல விஷயங்களை பாகம் பிரித்து பார்த்திருப்போம்.
ஆனால் கணவரை இரண்டு மனைவிகள் பாகம் பிரித்து பார்த்திருக்கிறீர்களா? அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் பவானிபூர் அருகே உள்ள கோடியாரியை சேர்ந்த ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது.
இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த நபருக்கு இன்னொரு பெண் மீது விருப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து தனக்கு திருமணம் நடக்கவில்லை எனக்கூறி அந்த பெண்ணை அவர் காதல் வலையில் வீழ்த்தினார்.
மேலும் முதல் மனைவிக்கு தெரியாமல் அவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். 2வது மனைவிக்கு ஒரு குழந்தை உள்ளது.
ஒவ்வொரு நாளும் இருவர் வீட்டிலும் அந்த நபர் குடும்பம் நடத்தி வந்தார். மேலும் 2 திருமண விவகாரத்தை வெளியே கசியாமல் நேர்த்தியாக சமாளித்து வந்தார்.
இதற்கிடையே தான் 2வது மனைவிக்கு தனது கணவர் மீது சந்தேகம் எழுந்தது. இதுபற்றி அவர் விசாரித்தார்.
அப்போது தான் தனது கணவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து இருப்பதும், அவர் தன்னை ஏமாற்றி 2வதாக திருமணம் செய்து கொண்டதையும் புரிந்து கொண்டார்.
இதேபோல் அந்த நபரின் முதல் மனைவிக்கும் அவரது 2வது திருமணம் குறித்த விஷயம் தெரியவந்தது.
இதனால் அவரது 2 மனைவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கணவரை விட்டுத்தர மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் இந்த பிரச்சனை பூர்னியா போலீஸ் நிலையத்தின் படி ஏறியது. மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போதும் மனைவிகள் இருவரும் கணவரை விட்டு கொடுக்க முன்வரவில்லை.
இதையடுத்து மூவருக்கும் போலீஸ் நிலைய குடும்ப நல ஆலோசனை மையம் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அந்த நபர் இரு மனைவிகளையும் பிரிய மறுப்பு தெரிவித்தது போல், மனைவிகளும் கணவரை பிரிய மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் ஆலோசகர்களும் செய்வதறியாது திகைத்தனர். இறுதியில் இந்த பிரச்சனைக்கு ஆலோசனை மையம் சார்பில் முடிவு கூறப்பட்டது.
அதன்படி கணவர் இரு மனைவிகளுடன் தலா 15 நாட்கள் வாழ வேண்டும். மாதத்தின் முதல் பதினைந்து நாட்கள் முதல் மனைவியுடனும், அடுத்த 15 நாட்கள் 2வது மனைவியுடனும் அவர் வாழ அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இரு மனைவிகளையும் தனித்தனி வீட்டில் வைத்து கொள்வதோடு, இருவரின் குடும்ப செலவுகளையும் அவர் ஏற்று கொள்ள வேண்டும் என ஆலோசனை மையம் கூறியுள்ளது.
இதற்கு இருமனைவிகளும் ஒப்புக்கொண்டனர். இந்த முடிவு தொடர்பாக பத்திரத்தில் மூவரும் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
