Connect with us

    “ஏண்டி என் லவ்வர் கூட பேசுற; அப்படி தாண்டி பேசுவேன்; அவன் என் ஆளுடி” – ஒரு பையனுக்காக நடு ரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட இரு கல்லூரி மாணவிகள்; வைரல் வீடியோ..!!

    Two girls fight

    Viral News

    “ஏண்டி என் லவ்வர் கூட பேசுற; அப்படி தாண்டி பேசுவேன்; அவன் என் ஆளுடி” – ஒரு பையனுக்காக நடு ரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட இரு கல்லூரி மாணவிகள்; வைரல் வீடியோ..!!

    சென்னை அண்ணா நகர் ரவுண்டானா பகுதியில் காதல் விவகாரத்தில், ஒரு இளைஞனுக்காக இரண்டு கல்லூரி மாணவிகள் மோதிக்கொண்ட நிலையில், இருவரும் தலை முடியை இழுத்துப் பிடித்து நடுரோட்டில் கட்டிப்புரண்ட சண்டைப் போட்ட சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

    Two girls fight

    சென்னை அண்ணா நகர் ரவுண்டானா பேருந்து நிலையத்தில், பேருந்து ஏறுவதற்காக அங்கு நேற்று ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது பேருந்து நிலையத்தில் மாணவி ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த இன்னொரு மாணவி, அவரிடம் கடுமையான வார்த்தைகளை சொல்லி திட்டி இருக்கிறார். சுற்றி பொது மக்கள் பலர் இதை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

    இரண்டு மாணவிகளும் மாறி மாறி திட்டிக்கொண்டு இருந்ததால் அங்கு கூட்டம் கூடியது.

    அதிலும் மாணவிகள் கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி மாறி மாறி திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நேரம் செல்ல செல்ல வாய் தகராறு சண்டையில் முடிந்தது. ஒரு மாணவியின் தலைமுடியை இன்னொரு மாணவி பிடித்து இழுத்து அடித்தார்.

    பதிலுக்கு இந்த மாணவியும் அந்த மாணவியின் கன்னத்தில் அறைந்து தரையில் தள்ளி தாக்கினார். அங்கிருந்த சக மாணவிகள் சிலர் இதை தடுக்க முயன்றனர்.

    ஆனால் யார் சமாதானப்படுத்தியும் நிற்காமல் இரண்டு மாணவிகளும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டனர்.

    இவர்கள் ஏன் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் என்று தெரியாமல் அங்கிருந்த மக்கள் குழம்பி போய் இருந்தனர்.

    அப்போதுதான் ஒரு மாணவி, ஏன்டி என் லவ்வர் கூட பேசுற நேற்று கேட்டு இன்னொரு மாணவியை தாக்கினார்.

    சக மாணவர் ஒருவருக்காக இரண்டு மாணவிகளும் அடித்துக்கொண்டது தெரிய வந்தது.

    இரண்டு மாணவிகளும் ஒரே ஆணை காதலிப்பதாக கூறப்படுகிறது.

    இதுதான் சண்டைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இப்படியாக, இரு மாணவிகள் அடித்து கொள்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு நின்ற இளைஞர் ஒருவர், அந்த மாணவிகளின் கூட்டத்திற்குள் புகுந்து அந்த சண்டையை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

    மாணவிகள் இருவரும் அங்கு சண்டை போட்டுக் கொண்டிருந்ததை, அங்கு நின்றுக்கொண்டு இருந்த மாணவர்களில் சிலர், தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

    இந்த வீடியோவானது, இணையத்தில் பெரும் வைரலன நிலையில், இது குறித்து சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!