Connect with us

    16 வயது சிறுமியிடம் செல்போன் வாங்கி கொடுத்து திருமணம் செய்து லெஸ்பியன் உறவு கொண்ட சகோதரிகள்; அதிர்ச்சி சம்பவம்..!!

    Two sisters lesbian with minor girl

    Tamil News

    16 வயது சிறுமியிடம் செல்போன் வாங்கி கொடுத்து திருமணம் செய்து லெஸ்பியன் உறவு கொண்ட சகோதரிகள்; அதிர்ச்சி சம்பவம்..!!

    மதுரை அருகே 16 வயது சிறுமியிடம் லெஸ்பியன் உறவு கொண்ட இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    Two sisters lesbian with minor girl

    மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி.

    கீழவளவு அருகில் உள்ள கரியாபட்டியைச் சேர்ந்தவர் சகிதா பேகம்(29).

    சிறுமியின் உறவினரான இவர், ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மேலும், இவர் கணவரை பிரிந்து வாழ்கிறார்.

    இந்நிலையில், சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த சகிதா பேகம் அவருடன் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

    பெற்றோர் வீட்டில் இல்லாத போது, தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொட்டு பழகி வந்துள்ளார் சபிதா.

    இதற்கிடையில் உறவினர் வகிதா பானு(29) என்பவரின் உதவியோடு, சிறுமியை சகிதா பேகம் ஏப்.6-ம் தேதி திருமணம் செய்தார்.

    பின்னர் மேலூரில் உள்ள தங்கும் விடுதியில் சிறுமியுடன் குடும்பம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

    அதோடு மட்டுமல்லாமல் சிறுமிக்கு செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்து அதன்மூலம் இருவரும் பேசி வந்துள்ளனர்.

    செல்போன் குறித்து சிறுமியின் பெற்றோர் கேட்டபோது, அவர் சகிதா பேகத்துடன் ஓரினச்சேரக்கையில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து பெற்றோர் சிறுமியைக் கண்டித்துள்ளனர்.

    இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மேலூர் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில், மேலூர் அனைத்து மகளிர் போலீசார், சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்த சகிதாபேகம் மற்றும் அவரது சகோதரி வகிதா பானு ஆகிய இருவர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்க நகைகள் திருடு போனதும், நகையை சிறுமி எடுத்து சகிதா பேகத்திடம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

    பின்னர், சகிதா பேகத்தை பிடித்து விசாரித்தபோது, அவரின் செல்போனில் சிறுமியுடன் திருமணம் செய்துகொண்ட புகைபட காட்சிகள் மற்றும் சிறுமியுடன் அந்தரங்கமாக இருக்கும் புகைப்படகாட்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையிலேயே சிறுமியை இவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி, குழந்தைத் திருமணம் செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இதற்கு உடந்தையாக அவரது சகோதரி வகிதாபானு இருந்துள்ளார்.

    இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!