Politics
தன் மகன் கைவலிமையை பார்த்து வியந்து போன உதயநிதி ஸ்டாலின்; வைரலாகும் புகைப்படம்..!
திமுக தலைவர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் அரசியல் குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், திரைத்துறையிலும் ஒரு அசத்து அசத்தினார்.
அவர் நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இதனை தொடர்ந்து கதிர்வேலன் காதல் , நண்பேன்டா , கெத்து, சரவணன் இருக்க பயமேன், மனிதன், கண்ணே கலைமானே , சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கடந்த 2002ம் ஆண்டு கிருத்திகா என்ற கல்லூரி தோழியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் உதயநிதி.
இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர்.
கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார்.
என் மீது கொண்ட அன்பால் சிலர் என்னை ‘மூன்றாம் கலைஞர்’, ‘இளம் தலைவர்’ என்றெல்லாம் அழைக்கிறார்கள்.
ஆனால், அவ்வாறு அழைக்க வேண்டாம். என்னை சின்னவர் என்றே அழைக்கலாம்.
என்னை சிலர் சின்னவர் என்று அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சிதான். இங்குள்ள பெரியவர்கள் உழைப்பின் முன் நான் சின்னவன்தான் என்று உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு இன்பன் உதயநிதி என்ற மகன் உள்ளார்.
இவர் கால்பந்து விளையாட்டில் தீவிரமாக கால்தடத்தைப் பதித்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகைக்குப் பிறகு இன்பன் குறித்து கவனம் எழுந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது, அவரது மகன் இன்பன் உதயநிதியுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், தற்போது தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை உதயநிதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் தன்னுடைய மகன் கை வலிமையை பிரமித்து பார்க்கிறார் உதயநிதி.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
