World News
டீக்கடைகாரர் மேல் மோகம் கொண்ட பெண் மருத்துவர்; தனி அறைக்கு வரவழைத்து என்ன செய்தார் தெரியுமா..?
காதல் இந்த மூன்றெழுத்து மந்திரத்துக்கு அடிமை ஆகாதவர்கள் இருக்கவே முடியாது.
அந்த அளவுக்கு எல்லோரது வாழ்விலும் வரக்கூடிய இன்பமான துன்பம் இது.
உண்மையான காதலுக்கு பணம், மதம், நாடு, மொழி, ஏழை, பணக்காரன் என்று எந்த ஒரு பாகுபாடும் தெரியாது.
அந்த வகையில் டீக்கடை காரரை பெண் மருத்து வர் ஒருவர் காதலித்து திருமணம் செய்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்ஹகிஷ்வர் ஷஹிபா. இவர் பெண் மருத்துவராக இருந்து வருகிறார்.
இவர் வேலை பார்த்து வந்த அதே மருத்துவமனையில் ஷாஷாத் என்பவர் மருத்துவர் அறைகளை சுத்தம் செய்வதும், மருத்துவர்களுக்கு டீ விற்பனை செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இப்படி மருத்துவமனையில் பணியாளராகவும், டீ விற்பனை செய்யும் நபராகவும் இருந்த ஷாஷாத் மீது தான் கிஷ்வர் ஷஹிபாவுக்கு காதல் வந்துள்ளது.
முன்னதாக, ஷாஷாதை முதலில் பார்த்த போது, மருத்துவமனை பணியாளராகவோ அல்லது டீ விற்பனை செய்யும் நபராகவோ ஷஹிபாவுக்கு தோன்றவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது சொந்த தொழிலை ஷாஷாத் நடத்தி வந்ததாலும், எளிமையாக இருந்ததாலும் அவர் பால் அதிகமாக ஈர்க்கப்பட்டுள்ளார் ஷஹிபா.
மேலும் அந்த மருத்துவமனையில், 3 மருத்துவர்களின் அறையை சுத்தம் செய்வதுடன் அவர்களுக்கு தேநீர் கொடுக்கும் வேலையை ஷாஷாத் பார்த்து வந்துள்ளார்.
அப்போது அவர் மீது ஏற்கனவே ஈர்க்கப்பட்ட கிஷ்வர் ஷஹிபா, போன் நம்பரையும் கேட்டு வாங்கி உள்ளார்.
இதன் பின்னர் இருவரும் பேச ஆரம்பித்துள்ளனர்.
அப்போது ஒரு நாள், தன்னுடைய மருத்துவர் அறையில் வைத்து தனது காதலையும் ஷாஷாத்திடம் ஷஹிபா வெளிப்படுத்தி உள்ளார்.
ஒரு பெண் மருத்துவர் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியதால் அதனை கொஞ்சம் கூட நம்ப முடியாத ஷாஷாத், அதிர்ந்து போனார்.
அதன் பின்னர் ஷஹிபா காதலுக்கு பின்னர் ஷாஷாத்தும் சம்மதம் சொன்னார்.
இந் நிலையில் இருவரும் கடந்த பல மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்துள்ளனர்.
மேலும், தன்னுடைய சக மருத்துவர்கள் தன்னை கிண்டல் செய்வதால் வேலையில் இருந்து ஒதுங்கிய ஷஹிபா, புதிதாக கிளினிக் ஒன்றை தொடங்கவும் திட்டம் போட்டுள்ளார்.
ஷஹிபா மற்றும் ஷாஷாத் ஆகியோர், பாகிஸ்தானின் திபால்புர் பகுதியில் ஒன்றாக இணைந்து வசித்து வருகின்றனர்.
இந்த ஜோடிக்கு இணையவாசிகள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..
