Viral News
“உன் மனைவியை ஒரு நைட் என்கிட்ட படுக்க வரச் சொல்” – டிரான்ஸ்பர் கேட்ட ஊழியருக்கு டிமாண்ட் வைத்த மின்வாரிய என்ஜினீயர்..!
மின்வாரிய ஜூனியர் எஞ்சினியர் லைன் மேனுக்கு தொல்லை கொடுத்து, அவரின் மனைவியை படுக்கைக்கு அழைத்து கொடுமை செய்ததால் லைன் மேன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர், கேரியில் உள்ள அம்மாநில மின்வாரியத்துறையில் லைன் மேனாக பணியாற்றி வருபவர் கோகுல் பிரசாத் (வயது 45).
இவர் கடந்த 22 வருடமாக மின்வாரிய துறையில் லைன் மேனாக பணியாற்றுகிறார்.
இவரின் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய ஜூனியர் எஞ்சினியருக்கும், கோகுலுக்கும் இடையே பிரச்சனை நடந்து வந்ததாக தெரியவருகிறது.
இதனால் மேலிட அதிகாரியான ஜூனியர் எஞ்சினியர், கோகுலை பல வகைகளில் துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், அவரை சமீபத்தில் வேண்டும் என்றே அலிகஞ்சு பகுதிக்கு அவர் மாற்றப்பட்டார்.
எனவே மீண்டும் பல்லியாவுக்கு இடமாற்றம் செய்யுமாறு தனது மேலதிகாரியான இளநிலை என்ஜினீயர் நாகேந்திர சர்மாவுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது, ஜூனியர் எஞ்சினியர் நீ பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தவிர்க்க வேண்டும் என்றால், உன் மனைவியை படுக்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்த கோகுல், பல்லியாவில் உள்ள நாகேந்திர சர்மாவின் வீட்டின் முன், கடந்த 9-ந்தேதி தீக்குளித்தார்.
இதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் மனவேதனையடைந்த கோகுல் பிரசாத் விஷயம் குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
மனதளவில் துயரத்தில் இருந்த கோகுல், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிருக்கு போராடியவரை மீட்டு லக்னோ அரசு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
லைன் மேன் கோகுலுக்கு ஜூனியர் எஞ்சினியர் அளித்த தொல்லை தொடர்பாக கோகுல் இறப்பதற்கு முன் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார்.
இந்த வீடியோ மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர், மின்வாரிய ஊழியர் கொலைக்கு காரணமான அதிகாரி நாகேந்திர சர்மாவையும், மற்றொரு லைன்மேனான ஜகத்பால் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது
