Tamil News
உ.பி பாஜ அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புதுக்கோட்டை இளைஞரை கைது செய்து அழைத்து சென்ற உ.பி போலீசார்..!
உத்தரபிரதேசத்தில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புதுக்கோட்டையை சேர்ந்த நபரை உ.பி.மாநில போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமுகமது(30).
இவர் உ.பி மாநில போலீஸ் உயரதிகாரிகளின் வாட்ஸ் அப் நம்பருக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதில், உ.பி மாநில பா.ஜ தலைமை அலுவலகத்திற்கு நான் குண்டு வைக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.
இதனால் உஷாரான உ.பி மாநில போலீசார் மெசேஜ் வந்த வாட்ஸ் அப் எண் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, உபி மாநில போலீசார் புதுக்கோட்டைக்கு வந்து ராஜாமுகமதுவை கைது செய்து திருக்கோகரணம் போலீஸ் ஸ்டேசனில் வைத்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், தன்னுடைய பெயர் உலகம் முழுவதும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தான் அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளான்.
இருப்பினும் அவனுக்கு வேறு ஏதேனும் இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என உத்தரபிரதேச போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், தொடர் விசாரணைக்காக, ராஜாமுகமதுவை உ.பி.,க்கு அழைத்து செல்வதற்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதனை முடிந்த பின்னர், புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராஜாமுகமதுவை உ.பி.க்கு அழைத்துச்சென்றனர்.
இச்சம்பவத்தால் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
