Connect with us

    தமிழில் உணவை ஆர்டர் செய்த அமெரிக்கருக்கு இலவசமாக உணவு வழங்கிய உணவக உரிமையாளர்; வைரலாகும் வீடியோ..!

    World News

    தமிழில் உணவை ஆர்டர் செய்த அமெரிக்கருக்கு இலவசமாக உணவு வழங்கிய உணவக உரிமையாளர்; வைரலாகும் வீடியோ..!

    நியூயார்க்கில் உள்ள பிரபலமான தோசை கடை ஒன்றில், தமிழ் மொழியில் உணவு ஆர்டர் செய்யும் அமெரிக்க யூடியூபரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

    Xiaomanyc

    Xiaomanyc என்கிற யூடியூப் சேனலை நடத்தி வரும் அவர், நியூயார்க் நகரத்தில் உள்ள மிகவும் பிரபலமான தோசைக் கடைக்குச் செல்லும் வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.

    அதை தொடர்ந்து, தமிழ் உணவுக் கடைக்கு சென்ற அவர், தமிழிலே பேசி உணவை ஆர்டர் செய்து, அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார்.

    அமெரிக்கர் ஒருவர் தமிழில் பேசி உணவு கேட்டதால் நெகிழ்ச்சி அடைந்த உணவக உரிமையாளர், ஸியோமாவுக்கு இலவசமாக உணவு வழங்கியுள்ளார்.

    தமிழ் உணவு சாப்பிட்ட அனுபவம் குறித்து யூடியூப் வீடியோவின் கேப்ஷனில் கூறியிருப்பதாவது, தமிழ் மொழியால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்.

    இன்னும் பயன்பாட்டில் உள்ள உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகும். இந்தியா, இலங்கையில் பேசப்படும் தமிழ் மொழியை, அமெரிக்காவில் கேட்பது மிகவும் அரிதானது.

    ஆனால் நியூயார்க் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தமிழ் பேசுபவர்களால் நடத்தப்படும் சில உணவகங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது.

    பழமையான மற்றும் அழகான மொழியில், நான் ஆர்டர் செய்ய முயற்சித்தேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை 9 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

    பலரும், யூடியூபரின் முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

    ஸ்மித்துக்கு இலவச உணவு வழங்கப்படுவது இது முதல் முறை அல்ல.

    முன்னதாக, குஜராத் உணவகம் ஒன்றுக்கு சென்ற அவர், குஜராத் மொழியில் உணவு ஆர்டர் செய்த போது, அவருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

    பின்னர், மற்றொரு இந்திய உணவகத்திற்குச் சென்ற ஸ்மித் குஜராத்தில் பேசி, அங்கிருந்த உரிமையாளரையும் ஆச்சரியப்படுத்தினார்.

    அவர் அளித்த மோரை குடிப்படியே, குஜராத்தி மொழியில் கலந்துரையாடினார்.

    அவருடைய குஜராத்தி நண்பர்கள் சிலர் மொழியை கற்றுக்கொடுத்ததாகவும், உணவு முயற்சி செய்ய ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!