Tamil News
இலங்கை அகதிகள் முகாமில் தனியாக இருந்த பெண்; கதவை திறந்து உள்ளே சென்று விஏஓ செய்த அசிங்கமான செயல்..!
குளித்தலையில் செயல்பட்டு வரும் இலங்கை அகதிகள் முகாமில் 35 வயதான பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற கிராம நிர்வாக அலுவலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் 108 இலங்கை மறுவாழ்வு முகாம்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இம்முகாமில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
குளித்தலை அருகே உள்ள இரும்பூதிப்பட்டி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.
இந்த கிராமத்தை உள்ளடக்கிய சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலராக வெஞ்சமாங்கூடலூரைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் திருமணமான பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, அன்புராஜ் ஒரு பெண்ணின் வீட்டின் பின்புற வாசல் வழியாக அத்துமீறி உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத பெண் அலறி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து அவரை ரவுண்டு கட்டி அடித்து திட்டி அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து சம்பவம் நடந்த மறுநாள் அந்த பெண் கடைக்கு சென்றார். அப்போது, அந்த பெண்ணை வழிமறித்த அன்புராஜ் புகார் ஏதும் கொடுத்தால் உன்னையும், உனது கணவரையும் அடியாட்கள் வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
