Tamil News
பட்டா பெயர் மாற்றம் செய்ய போலீசிடமே ரூ.3000 லஞ்சம் கேட்ட விஏஓ; அதிரடியாக சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்..!!
திருவாடானை அருகே ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,யிடம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் நொச்சிவயல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 26).
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவாடானை தாலுகா புல்லூர் குரூப் வி.ஏ.ஓவாக பணிபுரிந்து வந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், நாவலுாரைச் சேர்ந்தவர் மணி, 61; ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்.
இவர் திருவாடானை தாலுகா, புல்லுாரில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்து தருமாறு, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இந்த மனுவை வி.ஏ.ஓ சதீஷ் மேல் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இது தொடர்பாக வி.ஏ.ஓ. சதீஷை பல முறை நேரில் சந்தித்து பட்டா மாறுதல் மனுவை பரிந்துரைக்குமாறு ஒய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மணி கேட்டுள்ளார்.
ஆனால் வி.ஏ.ஓ சதீஷ் ரூ.3000 பணம் கொடுத்தால் தான் செய்து தர முடியும் என்று உறுதியாக கூறியதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த மணி ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளார்.
இது குறித்து, ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் மணி புகார் அளித்தார்.
வெள்ளையபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சதீஷிடம், நேற்று மணி பணத்தை வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சதீஷை கைது செய்தனர்.
