Tamil News
பட்டா மாற்றம் செய்ய ரூபாய் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!!
மயிலாடுதுறையில் பட்டா மாற்றம் செய்ய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அல்லி விளாகம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயி.
இவர் தனக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா மாறுதல் வேண்டி ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்நிலையில் பட்டா மாறுதல் செய்து தருவதற்கு செம்பதனிருப்பு விஏஓ செந்தில்நாதன் என்பவர் செல்வராஜிடம் லஞ்சமாக ரூ 5 ஆயிரம் கேட்டுள்ளார்
இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செல்வராஜிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்துள்ளனர்.
பணத்தை கொடுப்பதற்காக செம்பதனிருப்பு விஏஓ அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு விஏஓ இல்லை.
ஆனால் செல்வராஜ் வந்தது குறித்து தகவல் அறிந்த செந்தில்நாதன் செல்வராஜ் தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு வலியுறுத்தியுள்ளார்.
அதனை எடுத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரின் அறிவுரைப்படி சட்டநாத புரத்தில் உள்ள வீட்டிற்கு சென்று செந்தில்நாதனிடம் செல்வராஜ் பணத்தை கொடுத்து உள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி சித்திரவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் செந்தில்நாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் செந்தில்நாதன் சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
